நன்றியை தூக்கி எறிந்து விட்டனர்.. கும்ப்ளேவுக்காக கொந்தளிக்கும் பிரபலங்கள்! #Kumble

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: அனில் கும்ப்ளே ராஜினாமா விவகாரம் இந்திய கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து அனில் கும்ப்ளே விலகியுள்ளது பெரும் ஷாக் செய்தியாக வந்துள்ளது. கோஹ்லிக்கும், கும்ப்ளேவுக்கும் ஒத்துப் போகாத காரணத்தால் கும்ப்ளே விலகி விட்டார்.

Cricket fraternity supports Kumble

இந்த விலகல் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பேடி வெளியிட்டுள்ள ட்வீட்டில் நன்றி விசுவாசத்தை தூக்கி தூர வீசி விட்டனர். இது கும்ப்ளேவுக்கு இழப்பு அல்ல. இந்திய கிரிக்கெட்டுக்குத்தான் என்று சாடியுள்ளார்.

பத்திரிகையாளர் சேகர் குப்தா வெளியிட்டுள்ள ட்வீட்டில், இது மிகப் பெரிய மனிதப் பேரழிவு. ஆபரேஷன் செய்த பின்னர் தையல் போடாமல் டாக்டர் வெளியேறியது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்ளே கூறுகையில், இதுபோன்ற மனிதர்களை நாம் பாதுகாக்க வேண்டும். அனில் குமப்ளேவுக்கு இதை விட பெரிய பொறுப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Various VIPs in the Cricket fraternity have pledged their support to Anil Kumble, who has stepped down from the Head Coach post.
Please Wait while comments are loading...