நல்லாத்தாங்க ஆடுறோம்.. ஆனால் ஐசிசி தொடர்களில் மட்டும் சொதப்புறோம்.. டிவில்லியர்ஸ் வருத்தம்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: நன்றாகத்தான் ஆடுகிறோம், ஆனால் ஐசிசி தொடர்களில் ஏன் சொதப்புகிறோம் என்பது புரியவில்லை என தென் ஆப்பிரிக்க கேகப்டன் டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் தோற்றதால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது தென் ஆப்பிரிக்கா. இதுகுறித்து போட்டிக்கு பிறகு நிருபர்களிடம் டிவில்லியர்ஸ் கூறியதாவது: நாங்கள் கடந்த ஒன்றரை வருடங்களாக சிறப்பாக செயல்பட்டுள்ளோம். பல தொடர்களை வென்றுள்ளோம். வலை பயிற்சியிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். ஆனால், ஐசிசி தொடர்களில் ஏனோ தென் ஆப்பிரிக்காவின் தோல்வி தொடர்கிறது.

அடுத்த தொடரை பற்றி நான் இப்போது யோசிக்கவில்லை. உலக கோப்பைக்கு இன்னும் 3 வருடங்கள் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்கா உலக கோப்பை உள்ளிட்ட ஐசிசி தொடர்களில் தொடர்ந்து ராசியற்ற ஒரு அணியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
AB de Villiers couldn't hide his disappointment after South Africa were knocked out of the ICC Champions Trophy by India.
Please Wait while comments are loading...