ஷாக்கிங்.. தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம்.. 3 பேர் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றுள்ளது, இதுதொடர்பாக டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியை சேர்ந்த வினோத் ஷர்மா, விகாஸ் சவுத்ரி மற்றும் முகேஷ் அகர்வால் ஆகிய 3 பேர் சூதாட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

v

அவர்களிடம் இருந்து 13 செல்போன்கள், 2 லேப்டாப்கள், 3 எல்.சி.டி.க்கள் மற்றும் டி.வி. செட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடந்த விசாரணையில் ரூ.4 கோடி அளவில் சூதாட்டம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

சாப்ட்வேர் ஒன்றின் உதவியுடன் வாடிக்கையாளர்களின் அனைத்து கால்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதிலேயே அவர்களின் கணக்குகள் மற்றும் தகவல்கள் பராமரிக்கப்பட்டு உள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான வினோத் சர்மா, கடந்த 2015ம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டவரான முகேஷ் ஷர்மா என்பவரது சகோதரர் ஆவார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Delhi Police has busted a betting racket, who was betting on matches of Tamil Nadu Premier League (TNPL).
Please Wait while comments are loading...