ஆஸ்திரேலியா தோல்விக்கு காரணம் கண்டுபிடிச்சாச்சு!

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil
ஆஸ்திரேலியா தோல்விக்கு காரணம் கண்டுபிடிச்சாச்சு! | Oneindia Tamil

துபாய்: வங்கதேசத்துக்கு எதிராக நடந்த கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்ததற்கு காரணம் என்னவென்று கண்டுபிடிச்சாச்சு.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, சமீபத்தில் வங்கதேசத்தில், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதில், டாக்காவில், ஆகஸ்ட், 27ல் துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், 20 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வென்றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வங்கதேசம் பெற்றுள்ள முதல் வெற்றி அதுவாகும். அதன்பிறகு நடந்த இரண்டாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா வென்று, தொடர் சமநிலையில் முடிந்தது.

ஜெப் குரோ அறிக்கை

ஜெப் குரோ அறிக்கை

ஆஸ்திரேலியா, வங்கதேசம் இடையே நடந்த டெஸ்ட் போட்டிக்கான டாக்கா மைதானத்தின் ஆடுதளம் மற்றும் மைதானத்தின் தன்மை குறித்து, ஐசிசியின் மேட்ச் ரெபரி ஜெப் குரோ தனது அறிக்கையை, ஐசிசிக்கு அளித்துள்ளார்.

மைதானம் சரியில்லை

மைதானம் சரியில்லை

அதில், டாக்காவில்உள்ள ஷெர்-இ-பங்களா தேசிய விளையாட்டு மைதானத்தின் தரம் மிகவும் மோசமாக இருந்தது என்று கூறியுள்ளார். அது குரித்து பதிலளிக்கும்படி வங்கதேசம் கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி கேட்டுள்ளது.

ஆய்வு செய்வார்கள்

ஆய்வு செய்வார்கள்

அது அளிக்கும் பதிலை, ஐசிசியின் பொது மேலாளர்கள் ஜெப் அலார்டைஸ், ரஞ்சன் மடுகுலே ஆகியோர் ஆய்வு செய்வார்கள்.

சரி அவர்கள் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கட்டும்.

சென்னையில் என்ன காரணம் சொல்வாங்கோ

சென்னையில் என்ன காரணம் சொல்வாங்கோ

ஆஸ்திரேலியோ தோற்றதற்கு காரணம் தெரிந்துவிட்டதா? வரும் 17ம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியே இடையேயான முதல் ஒருதினப் போட்டி சென்னையில் நடக்க உள்ளது. தோல்வியடையும் அணி சாக்கு சொல்வதற்கு என்ன காரணம் கிடைக்கப் போகிறதோ!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ICC pitch and outfield panel has reported that the outfield of the Dhaka ground, which hosted the first test match between Aus-Bangladesh was poor
Please Wait while comments are loading...