பேட்டிங்கில் மட்டுமல்ல பந்து வீச்சிலும் இந்தியா அசத்தல்.. ஃபாலோ ஆன் தவிர்க்க இலங்கை போராட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், இலங்கை திணறி வருகிறது. ஃபாலோஆன் நிலைக்கு அணி தள்ளப்பட்டுள்ளது.

இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து தடுமாறிவருகிறது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இலங்கைக்கு எதிராக 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி, காலேவில் நேற்று தொடங்கியது.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது 600 ரன்கள் குவித்தது. தவானும், புஜாராவும், அபாரமாக சதம் விளாசினர். கடைசி நேரத்தில் ஹர்திக்பாண்டியா அதிரடி காட்டி அரை சதம் விளாசினார்.

அதிரடி

அதிரடி

இறுதிக் கட்டத்தில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா 49 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். இதில் 3 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். அதேபோல், முகமது ஷமியும் 3 சிக்சர்களுடன் 30 ரன்கள் திரட்ட, இந்திய அணி 600 ரன்களை எட்டியது. இலங்கைத் தரப்பில் பிரதீப் 6 விக்கெட்டுகளையும், குமாரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இலங்கை தடுமாற்றம்

இலங்கை தடுமாற்றம்

தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியில், தொடக்க வீரர் கருனரத்னேவை 2 ரன்னில் உமேஷ் யாதவ் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாக்கினார். அதைத் தொடர்ந்து குனத்திலகா மற்றும் குஷால் மெண்டிசை அடுத்தடுத்து ஷமி வெளியேற்றினார். நல்ல தொடக்கம் கண்ட உபுல் தரங்கா 64 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

Srikanth says, 'The craze for T20 will not affect Test cricket'-Oneindia Tamil
ஃபாலோ ஆன்

ஃபாலோ ஆன்

இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து தடுமாறிவருகிறது. மேத்யூஸ் 54 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஃபாலோ ஆன் தவிர்க்க இன்னும் அந்த அணிக்கு 247 ரன்கள் தேவை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India extended their dominance over Sri Lanka on the second day of the first Test at the Galle International Stadium.
Please Wait while comments are loading...