சிக்ஸர் விளாசும் போட்டி.. ராக்கெட் வேகத்தில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்த டோணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் தொடக்க விழாவின் சிக்ஸர் விளாசும் போட்டியில் டோணி ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அசத்தினார்.

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் டோணி, மோஹித் சர்மா, பத்ரிநாத், பவந் நேகி, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன், தமிழ்நாடு பேட்ஸ்மேன் அனிருத் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டு சிக்ஸர் விளாசும் போட்டி இன்று மாலை சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்தது.

dhoni 3 sixes in TNPL 2017

மெஷின் மூலம் வீசப்படும் பந்தை சிக்சருக்கு விளாசுவதுதான் இந்த சிக்ஸ் விளாசும் போட்டி. இந்தப் போட்டியில் முதல் நபராக ஹைடன் சிக்ஸ் அடிக்க களம் இறங்கினார். அவர் முதல் பந்தை தவிர மற்ற இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு பறக்க விட்டார்.

அடுத்து வந்த நெஹி சிக்ஸ் அடிக்கவில்லை. அனிருத் ஸ்ரீகாந்திற்கு சரியாக பந்துகள் அமையவில்லை. அதன்பிறகு களமிறங்கிய டோணி பவுலிங் மெஷினிலிருந்து சீறிப் பாய்ந்த பந்தை அசூர வேகத்தில் சிக்ஸருக்கு விளாசினர் டோணி. தான் சந்தித்த மூன்று பந்துகளையும் சிக்ஸ் விளாசி அசத்தினார் டோணி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Mahendra Singh Dhoni 3 sixes in TNPL 2017 at MA Chidambaram Stadium in Chennai
Please Wait while comments are loading...