அடேங்கப்பா டெடிகேஷன்.. விமர்சனம் செய்தவர்கள் வாயை அடைக்க டோணிக்கு இந்த ஒரு போட்டோ போதும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அடேங்கப்பா டெடிகேஷன்.. விமர்சனம் செய்தவர்கள் வாயை அடைத்த தோனி- வீடியோ

ராஜ்கோட்: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டோணி மெதுவாக ஆடியதாக ரசிகர்கள் விமர்சனங்களை முன் வைத்தாலும், அவரது ஒரு போட்டோ மட்டும் வைரலாக சுற்றி வருகிறது.

இந்திய அணியிலுள்ள மிக மூத்த கிரிக்கெட் வீரர் டோணிதான். 36 வயதாகும் டோணி இப்போதும் ஃபிட்டாக இருப்பதை இந்த ஒரு படம் உலகிற்கு எடுத்துக் காட்டி விட்டது.

மேலும், ஸ்டெம்புக்கு பின்னால் நின்று கீப்பிங் செய்யும்போது எப்படி மின்னல் வேகத்தில் செயல்பட்டு எதிரணி பேட்ஸ்மேனை ஸ்டெம்பிங் செய்வாரோ, அதே போன்ற வேகத்தில் இவர் ஸ்டெம்பிங்கில் இருந்து தப்பியுள்ளார் என்றும் புகழாரம் சூட்டுகிறார்கள் ரசிகர்கள்.

மிஸ் செய்த டோணி

மிஸ் செய்த டோணி

17வது ஓவரை ஸ்பின் பவுலர் மிட்சேல் சான்ட்னர் வீசியபோதுதான் அந்த நிகழ்வு அரங்கேறியது. கிரீசை விட்டு இறங்கி வந்து ஆட முற்பட்டார் டோணி. ஆனால் பந்து மிஸ்சாகி விக்கெட் கீப்பரை நோக்கி சென்றது.

டோணி யோகாசனம்

துரிதமாக செயல்பட்ட டோணி, வலது காலை பின்னால் வைத்து கிரீசை டச் செய்துவிட்டார். ஆனால் இடதுகாலோ பல அடி முன்னால் இருந்தது. கிட்டத்தட்ட யோகாசனம் செய்பவரை போல காணப்பட்டார் டோணி.

டோணி நிதான ஆட்டம்

டோணி நிதான ஆட்டம்

இந்த படம்தான் இப்போது வைரலாக சுற்றி வருகிறது. டோணி அப்போட்டியில் முதலில் மெதுவாக ஆரம்பித்தாலும், பிறகு சற்று அதிரடி காட்டினார். ஆனால் டார்கெட் மிக அதிகம் என்பதால் இந்திய அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை.

விட்டுக்கொடுக்காத கோஹ்லி

விட்டுக்கொடுக்காத கோஹ்லி

ரசிகர்கள் டோணியை விமர்சனம் செய்தாலும், கேப்டன் கோஹ்லி அவரை விட்டுக்கொடுக்கவில்லை. இதுகுறித்து கூறுகையில், டோணி தன்னால் முடிந்ததை செய்தார். ஆனால் டார்கெட் மிக அதிகம் என்பதால் எட்டுவது சிரமமாக மாறியது. நானும் முடிந்த அளவுக்கு முயன்றேன். ஆனால், ஏதாவது ஒரு பேட்ஸ்மேனாவது 200 ஸ்டிரைக் ரேட்டுடன் அதிரடியாக ஆட வேண்டிய கட்டாயம் இருந்தது. இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Coming down the track to play Mitchell Santner, Dhoni was foxed by the spinner. But he did a full split to return to the crease before Glenn Phillips could remove the bails.
Please Wait while comments are loading...