For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

15 ஓவர்களுக்குள் 5 பவுலர்களை மாற்றிய டோணி.. காரணம் என்ன?

By Veera Kumar

சிட்னி: முதல் 15 ஓவர்களுக்குள் 5 பவுலர்களை மாற்றியுள்ளார் கேப்டன் டோணி. இதன் மூலம், பின்ச், ஸ்மித் நடுவேயான பார்ட்னர்ஷிப்பை எப்படியாவது உடைத்துவிட வேண்டும் என்று அவர் பிரயத்தனம் செய்வது தெந்தது.

முகமது ஷமியும், உமேஷ் யாதவும் முதல் 10 ஓவர்களை பகிர்ந்து வீசிய நிலையில், பவர் பிளே முடிந்ததுமே, மோகித் ஷர்மாவை அழைத்தார் டோணி. அதற்கு அடுத்த ஓவரை, அஸ்வின் வீசுவார் என்று எதிர்பார்த்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், கோஹ்லியை பந்து வீச அழைத்தார்.

Dhoni is desperate to break this partnership

நல்லவேளையாக அந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே போனது. கோஹ்லியை வைத்து மைன்ட்கேம் ஆட டோணி பிரயத்தனப்பட்டதாக கூறுகின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள். இதற்கு அடுத்த ஓவரை மோகித்தை வீச அழைக்காமல், ரவீந்திர ஜடேஜாவிடம் கொடுத்தார் டோணி. ஆகமொத்தம், 15 ஓவர்களுக்குள்ளாக 5 பந்து வீச்சாளர்களை மாற்றினார் டோணி.

இதன் மூலம், யாருடைய பந்து வீச்சிலாவது இந்த பார்ட்னர்ஷிப் உடைந்துவிடாதா என்பது டோணியின் நோக்கமாக இருந்தது. ஆனால் அந்த பார்ட்னர்ஷிப் 182 ரன்களை குவித்து உடைந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, March 26, 2015, 12:54 [IST]
Other articles published on Mar 26, 2015
English summary
5 bowlers including Jadeja bowled before 15 overs. Clearly Dhoni is desperate to break this partnership.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X