ரண களத்துலயும் ஒரு கிளுகிளுப்பு... மழையால் ஆட்டம் தாமதமானபோது டோணி என்ன செய்தார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
மழையால் ஆட்டம் தாமதமானபோது தோனி என்ன செய்தார் தெரியுமா?- வீடியோ

திருவனந்தபுரம்: இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டி-20 போட்டி பல சிக்கல்களுக்கு இடையில் செவ்வாய் கிழமை நடந்து முடிந்தது. இந்த டி-20 ஆட்டம் மழையால் தாமதம் ஆனா போது டோணி ஜாலியாக லெக் வாலிபால் விளையாடி இருக்கிறார்.

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டி-20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செவ்வாய் கிழமை இரவு நடந்தது. காலையில் இருந்து பெய்த மழை காரணமாக முதலில் போட்டி தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. மழை நின்ற பின் 2.30 மணி நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது.

Dhoni is playing foot volleyball vs New Zealand player

இதனால் இந்த போட்டி அணிக்கு 8 ஓவராக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் மைத்தானத்தில் மழை பெய்து கொண்டிருந்த போது டோணி ஜாலியாக லெக் வாலிபால் விளையாடி இருக்கிறார்.

அந்த மைதானத்தில் இருக்கும் உள்விளையாட்டு அரங்கில் நியூசிலாந்து அணி வீரர்களுடன் அவர் எந்தக் கவலையும் இன்றி விளையாடி இருக்கிறார். மேலும் வாலிபாலுக்கு இடையில் கட்டியிருக்கும் வலை இல்லாததால் அதற்கு பதிலாக நாற்காலியை தடுப்பாக உபயோகித்து இருக்கின்றனர்.

What do you do in a rain delay? Play soccer volleyball with @tombruce42 @mahi7781 and @manishpandeyinsta !

A post shared by Martin Guptill (@martyguptill31) on Nov 8, 2017 at 8:55am PST

இந்த போட்டியை டோணியும், மணீஷ் பாண்டேவும் சேர்ந்து நியூசிலாந்தின் குப்தில், டாம் புரூஸ் ஆகியோருடன் விளையாடினர். தற்போது இது வீடியோவாக வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவை குப்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The third T20I between India and New Zealand has delayed due to heavy rain in Thiruvananthapuram. While raining Dhoni is playing foot volleyball vs New Zealand players.
Please Wait while comments are loading...