For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிடைத்த கேப்பில் புகுந்து விளையாடிய டோணி.. நேற்றைய போட்டியில் தல செய்த சாதனை என்ன தெரியுமா?

இந்தியா மற்றும் இலங்கை மோதிய முதல் ஒருநாள் போட்டியில் டோணி சிறப்பாக ஆடி 65 ரன்கள் எடுத்தார்.

By Shyamsundar

தர்மசாலா: இந்தியா மற்றும் இலங்கை மோதிய முதல் ஒருநாள் போட்டியில் டோணி சிறப்பாக ஆடி 65 ரன்கள் எடுத்தார். நேற்று நடந்த இந்த போட்டியில் இவர் மட்டுமே ஒழுங்காக ஆடினார்.

மிகவும் அதிரடியாக ஆடிய டோணி 65 ரன்கள் இருந்த போது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்த போட்டியில் 65 ரன்கள் அடித்ததன் மூலம் இவர் புதிய சாதனை ஒன்றையும் படைத்து இருக்கிறார்.

நேற்றைய போட்டியில் டோணி மட்டுமில்லாமல் இந்திய அணியும் சில மோசமான சாதனைகள் படைத்து இருக்கிறது.

அதிரடியாக ஆடிய டோணி

அதிரடியாக ஆடிய டோணி

கடந்த சில வாரங்களாக கிரிக்கெட் உலகில் டோணி எப்போது ஓய்வு பெறுவார் என்று பலரும் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். இதனால் அவர் மீது பெரிய அழுத்தம் இருந்தது. இந்த அழுத்தத்துடன் விளையாடிய டோணி மிகவும் அதிரடி காட்டினார். இந்தியாவில் மொத்தம் 4 வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். ஆனாலும் டோணி சிறப்பாக ஆடி 65 ரன்கள் எடுத்தார். இது இந்திய அணியின் ஸ்கோரில் பாதி ஆகும்.

புதிய சாதனை

புதிய சாதனை

இந்த போட்டியில் 65 ரன்கள் எடுத்ததன் மூலம் டோணி புதிய சாதனை படைத்து இருக்கிறார். அதன்படி இவர் 16,000 ரன்களை கடந்து இருக்கிறார். இந்திய அணியில் 16,000 ரன்களை கடக்கும் 6 வது வீரர் டோணி ஆவார். ஏற்கனவே சச்சின், டிராவிட், கங்குலி, சேவாக் ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளனர். கோஹ்லி சில நாட்களுக்கு முன் இந்த மைல் கல்லை எட்டினார்.

இரண்டாவது கீப்பர்

அதுபோல் இவர் இந்த போட்டியில் 16,000 ரன்களை அடைந்ததன் மூலம் இன்னொரு சாதனையையும் செய்துள்ளார். இவர்தான் கிரிக்கெட் உலகில் 16,000 ரன்கள் எடுத்த இரண்டாவது விக்கெட் கீப்பர். இதற்கு முன்பு இதே சாதனையை இலங்கையின் குமார் சங்கரகரா செய்துள்ளார். மேலும் இது டோணியின் 67வது அரைசதம் ஆகும்.

சாதனை படைத்த இந்தியா

சாதனை படைத்த இந்தியா

இந்த போட்டியில் இந்திய அணி மோசமாக ஆடியது. ஆனால் அதன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

1983ல் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 17 ரன்கள் எடுத்து இருந்த போது 5 வது விக்கெட்டை இழந்தது. 5 விக்கெட்டுக்கு இந்தியா எடுத்த குறைந்தபட்ச ரன் இதுவாகத்தான் இருந்தது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய 5 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் மட்டுமே எடுத்து. இதன்மூலம் இந்திய அணி தனது மோசமான சாதனையை முறியடித்துள்ளது.

Story first published: Monday, December 11, 2017, 13:37 [IST]
Other articles published on Dec 11, 2017
English summary
Dhoni's create a record in first one day match against Sri Lanka. Dhoni took 65 runs in first one day match against Sri Lanka.He completed his 16,000 international runs during this match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X