விராத்தை விரட்டி விரட்டி காதலிச்சுச்சே.. அந்தப் பொண்ணை ஞாபகமிருக்கா??

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: விராத் கோஹ்லியை கொஞ்ச காலத்திற்கு முன்பு ஏய் என்னைக் கட்டிக்கிறியான்னு கேட்டுச்சே டேணியல் வியாட்.. ஞாபகமிருக்கா.. இல்லாட்டியும் பரவாயில்லை. இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள வியாட், மகளிர் உலகக் கோப்பையை வெல்ல படு முனைப்பாக ஆயத்தமாகி வருகிறாராம்.

லண்டனில் மகளிர் உலகக் கோப்பைப் போட்டிகள் 24ம் தேதி தொடங்குகின்றன. இதற்காக இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் தயாராகி வருகின்றன. இந்திய அணி கேப்டன் மித்தாலி ராஜ் தலைமையில் களம் காண்கிறது.

வலுவான திட்டத்துடன் இந்திய அணி களத்தில் புகுந்துள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் வியாட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். குறிப்பாக இந்திய ரசிகர்களின் கவனத்தை.

விராத்தை விரட்டிய வியாட்

விராத் கோஹ்லியின் படு தீவிரமான ரசிகைதான் வியாட். 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் தேதி விராத் கோஹ்லி என்னைக் கட்டிக்கோ என்று டிவீட் போட்டு ஒட்டுமொத்த கோஹ்லி ரசிகைகளையும் பொங்க வைத்தவர் வியாட்.

தீவிர ரசிகை

விராத்தை தொடர்ந்து விரட்டிக் கொண்டுதான் உள்ளார் வியாட், அதாவது டிவிட்டரில்தான். சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் கூட விராத் கோஹ்லி டபுள் செஞ்சுரி அடிப்பாரா என்று கேட்டு டிவீட் போட்டு கோஹ்லி ரசிகர்களின் ஆரவார வரவேற்பைப் பெற்றார்.

இங்கிலாந்துக்கு வெற்றி தேடித் தருவாரா

இங்கிலாந்துக்கு வெற்றி தேடித் தருவாரா

இந்த நிலையில் தற்போது விராத் கோஹ்லி மோகத்துக்கு கொஞ்சம் போல பிரேக் விட்டு விட்டு உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளார் வியாட்.

ஆல் ரவுண்டர் பாஸ்

ஆல் ரவுண்டர் பாஸ்

வியாட் ஒரு ஆல் ரவுண்டர். வலது கை பேட்ஸ்வுமனாக மட்டுமல்லாமல் ஆப் பிரேக் பவுலரும் கூட. ஒரு நாள் போட்டிகளில் தென்றலாக ஆடும் இவர், டுவென்டி 20 போட்டிகளில் புயலாக மாறி விடுவார். பந்து வீச்சிலும் கூட டுவென்டி 20 போட்டிகளில்தான் அதிக விக்கெட்களைச் சாய்த்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக அறிமுகம்

இந்தியாவுக்கு எதிராக அறிமுகம்

இந்தியாவுக்கு எதிராகத்தான் இவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. மும்பையில், 2010 மார்ச் 1ம் தேதி நடந்த போட்டிதான் இவரது முதல் ஒரு நாள் போட்டி. மார்ச் 4ம் தேதி இந்தியாவுக்கு எதிரான டுவென்டி 20 போட்டியில் அறிமுகமானார்.

பார்க்கலாம்.. கோஹ்லி ரசிகை அவரைப் போலவே அதிரடி காட்டி அசத்துவாரா என்பதை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Danielle Wyatt, is an all rounder playing in the England women's team in the Women's world cup 2017 tournament. An ardent Kohli fan, Danielle is getting ready to lift the WC for the England.
Please Wait while comments are loading...