For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெற்றி பெற இந்திய அணிக்கு தகுதியே இல்லை.. கோஹ்லி கோபம்

By Veera Kumar

டெல்லி: சோம்பேறித்தனம் காண்பித்த இந்திய அணி வெற்றி பெற தகுதியுடையது இல்லை என்று விளாசியுள்ளார், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நேற்று இரவு நடைபெற்ற டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா, 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்களை எடுத்தது. ஆனால் அடுத்ததாக பேட் செய்த மே.இ.தீவுகள் அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

அந்த அணியின் எவின்லீவிஸ் 62 பந்துகளில் 125 ரன்கள் விளாசினார். 12 சிக்சர்களும், 6 பவுண்டரிகளும் இதில் அடங்கியிருந்தது. வெறும் 18.3 ஓவர்களிலேயே மே.இ.தீவுகள் வெற்றி பெற்றது.

கோஹ்லி பேட்டி

கோஹ்லி பேட்டி

இதுகுறித்து போட்டிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் கோஹ்லி நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய அணி பேட் செய்தபோது இன்னும் 25-30 ரன்கள் அதிகம் சேர்க்க வாய்ப்பு இருந்தது. அப்படி செய்திருந்தால் 230 ரன்கள் வரை விளாசியிருக்க முடியும். ஆனால் அதையும் பேட்ஸ்மேன்கள் செய்யவில்லை.

கேட்ச்சுகள் மிஸ்

கேட்ச்சுகள் மிஸ்

அதேபோல ஃபீல்டிங்கின்போது சில வாய்ப்புகளை ஃபீல்டர்கள் தவறவிட்டுவிட்டனர். அதுபோன்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால் அணியா் வெற்றி பெற முடியாது. அந்த வெற்றிக்கு நீங்கள் தகுதியானவர்கள் கிடையாது.

பேட் செய்திருக்கலாம்

பேட் செய்திருக்கலாம்

ஓப்பனிங்கில் நல்ல தொடக்கம் தந்த பிறகு அதை பிறகு வரும் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பயன்படுத்தியிருக்கலாம். தினேஷ் கார்த்திக் மட்டும் பின்வரிசையில் சிறப்பாக அதை செய்தார். யாராவது ஒருவர் 80-90 ரன்களை விளாசியிருக்க வேண்டும். டி20 கிரிக்கெட்டில் அதுதான் தேவை.

பந்து வீச்சும் அப்படியே

பந்து வீச்சும் அப்படியே

பந்து வீச்சிலும் ஆரம்பம் சரியாக இல்லை. ஃபீல்டிங்கும் சரியாக இில்லை. இந்த போட்டிகள் எல்லாம், சூழ்நிலைக்கு தக்கபடி எப்படி செய்லப்ட வேண்டும் எனப்தற்கான பாடங்கள்.

கவலை வேண்டாம்

கவலை வேண்டாம்

இந்திய டி20 அணி இன்னும் மேம்பட வேண்டியுள்ளது. ஆனால் மொத்தமாக அணி செயல்பாடு மகிழ்ச்சியளிப்பதாகத்தான் உள்ளது. மே.இ.தீவுகளும் நல்ல ஒரு டி20 அணி. கடந்த இரு வருடங்களாகவே அதே அணியை அவர்கள் தக்க வைத்துள்ளனர். வெள்ளோட்டம் செய்து பார்க்கும்போது நமக்கு சில ஏற்ற, இறக்கங்கள் கிடைக்கும். அதை சீரியசாக எடுக்க தேவையில்லை.

மகிழ்ச்சிதான்

மகிழ்ச்சிதான்

ஒருநாள் போட்டிகளில் ஒன்றை இந்தியா தோற்றது. 3 போட்டிகளில் எளிதாக வெற்றி பெற்றோம். டி20 என்பது வேறு வகை போட்டி. ஒரு போட்டியில் தோற்றதால் மனமுடைய தேவையில்லை. மொத்தத்தில் இந்த சுற்றுப் பயணம் இந்தியாவுக்கு சிறந்ததாகவே அமைந்திருந்தது. இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார்.

Story first published: Monday, July 10, 2017, 16:47 [IST]
Other articles published on Jul 10, 2017
English summary
Skipper Virat Kohli was critical of India's performance against the West Indies in the one-off T20, saying his team was sloppy with both the bat and ball and did not deserve to win.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X