எது வருதோ அதை மட்டும் செய்யுங்க கோஹ்லி.. டிராவிட் அட்வைஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தானுடன் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி தொடர்பாக கேப்டன் கோஹ்லிக்கு முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் சில அறிவுரைகளை கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக அனுபவம் வாய்ந்த சோயப் மாலிக் மற்றும் முகம்மது ஹபீஸ் ஆகியோர் சிறப்பாக ஆடினால் மட்டுமே பாகிஸ்தானுக்கு ஏதாவது நல்லது நடக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார் டிராவிட்.

தற்போது உள்ள அணியில் பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் கோஹ்லி செய்ய்ய வேண்டாம் என்றும் அது ரிஸ்க் ஆகி விடும் என்றும் டிராவிட் எச்சரித்துள்ளார்.

அப்படியே போங்க

அப்படியே போங்க

இதுகுறித்து டிராவிட் கூறுகையில், வங்கதேசத்துடன் நடந்த போட்டியின்போது மோதிய அதே அணியையே பாகிஸ்தான் போட்டிக்கும் பயன்படுத்துவதே நல்லது. அணியில் மாற்றம் தேவையில்லை.

எது வருதோ அதை மட்டும் செய்யலாம்

எது வருதோ அதை மட்டும் செய்யலாம்

அணிக்கும், அவருக்கும் எது சரிப்பட்டு வருகிறதோ அதை தொடர்ந்து செய்யலாம். தற்போதைய அணி சேஸிங்கை விரும்புகிறது. அதை திறம்படவும் செய்துள்ளது. அருமையான வீரர்கள் உள்ளனர். நெருக்கடியான நேரத்திலும் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

ஆரம்பத்தில் நிதானம்

ஆரம்பத்தில் நிதானம்

ஆரம்பத்தில் இந்தியா நிதானம் காட்டுகிறது. அதை சிலர் கேள்வி கேட்கலாம். இருப்பினும் ரோஹித்தையும், ஷிகர் தவானையும் வைத்து நல்ல வலுவான அடித்தளத்தை அமைக்க கோஹ்லி விரும்புகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்குப் பின்னால் நல்ல பல வீரர்கள் உள்ளதை மறந்து விடக் கூடாது.

அருமையான பேட்டிங்

அருமையான பேட்டிங்

இந்திய அணியின் பேட்டிங் அருமையாக உள்ளது. நல்ல கலவையுடன் உள்ளது. எனவே இது ஒரு நல்ல அணி என்று நான் நிச்சயம் சொல்வேன். இந்திய வீரர்களில் கேதார் ஜாதவ் பேட்டிங்கிலும் கை கொடுக்கிறார். ஹர்டிக் பாண்ட்யா இருக்கிறார். யுவராஜ், டோணி குறித்து சொல்லவே வேண்டாம்.

சோயப், ஹபீஸ் கையில் உள்ளது

சோயப், ஹபீஸ் கையில் உள்ளது

பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு நெருக்கடி தர வேண்டுமானால் அனுபவம் வாய்ந்த வீரர்களான சோயப் மாலிக், ஹபீஸ் ஆகியோர் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். இது ஒரு அருமையான இறுதிப் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பாகிஸ்தான் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றார் டிராவிட்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former captain Rahul Dravid has asked Kohli not to change the Indian team for the finals with Pakistan
Please Wait while comments are loading...