2வது முறையாக கோப்பை தவறினாலும்.. இதயங்களை அள்ளிய இந்திய மகளிர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லார்ட்ஸ்: மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு 2வது முறையாக முன்னேறிய இந்திய அணி, இங்கிலாந்து அணியிடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்தது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கு இந்திய தீவுகள் ஆகிய 8 அணிகள் பங்கேற்றன. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

 England beat India by 9 runs in a thriller to lift ICC Women's World Cup 2017

இந்த தொடரில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பவுலிங் என சிறந்து விளங்கியது. மிதாலி ராஜ் தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தி ரன்கள் குவித்து வந்தார். பூணம் ரவுட், ஹர்மன்பிரீத், வேதா கிருஷ்ணமூர்த்தி என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கலக்கி வந்தனர்.

லீக் சுற்றில் முதல் 4 போட்டிகளில் இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள், இலங்கை அணிகளை வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடான போட்டியில் தோல்வியை சந்தித்தது. எனினும் அடுத்து நடந்த நியூசிலாந்து அணியுடான போட்டியில் அந்த அணியை வீழ்த்தி துவம்சம் செய்தது இந்தியா.

இதையடுத்து நடைபெற்ற அரையிறுதி போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த இறுதிப் போட்டி லண்டன் லாரட்ஸ் மைதானத்தில் இன்று நடந்து. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 48.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் நான்காவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து. இதற்கு முன்பு 1973, 1993, 2009ல் சாம்பியன் பட்டத்தை அந்த அணி கைப்பற்றிருந்தது.

இதற்கு முன்பு 2005ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்த இந்திய அணி அதில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று இருந்தது. இந்த முறை இந்தியா பைனலுக்கு முன்னேறியதும் கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் மிகச் சிறப்பாக ஆடியும் கூட கடைசி நேர குழப்பங்களால் இந்தியா உலகக் கோப்பையை வெல்லமுடியாமல் போனது. கோப்பையை வெல்ல முடியாவிட்டாலும் ஆண்கள் கிரிக்கெட்டுக்கு இணையாக ரசிகர்களின் இதயங்களை அள்ளியது இந்திய மகளிர் படை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Pacer Anya Shrubsole grabbed an six-for as England restricted India to 219 in a nail-biting thriller and won the ICC Women's World Cup 2017 here at Lord's on Sunday.
Please Wait while comments are loading...