பயிற்சி ஆட்டத்தில் டோணி காலில் விழுந்த ரசிகர்.. மைதானத்தில் பரபரப்பு !

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இங்கிலாந்து லெவனுக்கு எதிரான இந்தியா ஏ அணியின் பயிற்சி ஒருநாள் ஆட்டத்தில் டோணி ஆடிக்கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் ஓடி வந்து டோணியின் காலில் விழுந்தார்.

இந்திய ஏ அணி, இங்கிலாந்து லெவன் அணி மோதிய பயிற்சி ஆட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. பொதுவாக பயிற்சி ஆட்டத்தைக் காண அதிக அளவில் ரசிகர்கள் வரமாட்டார்கள். ஆனால் கேப்டனாக டோணியின் கடைசி போட்டி என்பதால் அதிக அளவில் ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர்.

Fan invades pitch to touch MS Dhoni's feet

இதனிடையே நேற்றைய ஆட்டத்தில் ஹர்த்திக் பாண்ட்யாவுடன் இணைந்து கேப்டன் டோணி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பையும் மீறி திடீரென மைதானத்திற்குள் ரசிகர் ஒருவர் ஓடி வந்தார், அவர் டோணிக்கு அருகில் வந்த போது டோணி அவருக்கு கைகொடுக்கும் செய்கையாக கையை நீட்டினார்.

Fan invades pitch to touch MS Dhoni's feet

ஆனால் அவரோ சற்றும் எதிர்பாராத விதமாக டோணியின் காலில் விழுந்தார். பின்னர் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
As Mahendra Singh Dhoni captains the Indian side for one last time on Tuesday (Jan 10), an enthusiastic MS Dhoni fan breached the security cordon and rush towards cricket pitch to touch "Captain Cool"s feet.
Please Wait while comments are loading...