"பங்காளிக" மோதப் போறாங்க.. வாங்க இப்பவே ரெடியாவோம்.. வேடிக்கை பார்க்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: இந்தியா - பாகிஸ்தான் லீக் ஆட்டத்தில் விளையாடினாலே அனல் பறக்கும். இறுதிப் போட்டியில் ஆடினால் எப்படி இருக்கும்.. சும்மா தூள் பறக்குமே. அந்த அதிரடி தூள் ஆட்டத்தைக் காண ஜூன் 18ம் தேதி வரைக்கும் மக்கள் காத்திருக்கத்தான் வேண்டும்.

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் தகுதி பெற்றுள்ளன. இங்கிலாந்தை விரட்டியடித்து பாகிஸ்தானும், வங்கதேசத்தை வறுத்தெடுத்து இந்தியாவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளன.

லீக் போட்டியில் பாகிஸ்தானை புரட்டி எடுத்ததால் படு தெம்புடன் காணப்படுகிறது இந்தியா. அதை விட முக்கியமாக வங்கதேசத்தை இந்தியா அடித்த அடியைப் பார்த்து நிச்சயம், பாகிஸ்தானுக்கு சற்று அச்சம் பிறந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சரி இரு நாடுகளின் தனிப்பட்ட மோதல் குறித்த ஒரு மின்னல் வேக தகவலைப் பார்க்கலாமா

முதல் சந்திப்பு

முதல் சந்திப்பு

இரு நாடுகளின் முதல் டெஸ்ட் போட்டி 1952ம் ஆண்டு அக்டோபரில் நடந்தது. ஒரு நாள் போட்டியில் இரு அணிகளும் முதலில் சந்தித்தது 1978ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டுவென்டி 20 மோதல் 2007 செப்டம்பர் 14ம் தேதியன்று நடந்தது.

பாகிஸ்தான பலசாலி

பாகிஸ்தான பலசாலி

டெஸ்ட் ஒரு நாள் போட்டிகளைப் பொறுத்தவரை இந்தியாவை விட பாகிஸ்தான்தான் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளது. இரு அணிகளும் மோதிய டெஸ்ட் போட்டிகள் 59. இதில் பாகிஸ்தான் 12 போட்டிகளிலும், இந்தியா 9 போட்டிகளிலும் வென்றுள்ளன.

72க்கு 52

72க்கு 52

இரு அணிகளும் மோதிய ஒரு நாள் போட்டிகள் 128. இதில் பாகிஸ்தான் 72 போட்டிகளிலும், இந்தியா 52 போட்டிகளிலும் வென்றுள்ளன.

டுவென்டி 20யில் நாம்தான் பாஸ்

டுவென்டி 20யில் நாம்தான் பாஸ்

அதேசமயம், டுவென்டி 20 போட்டிகளில் இந்தியாதான் ஆதிக்கம் செலுத்துகிறது. இதுவரை மொத்தம் 8 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 6 போட்டிகளிலும், பாகிஸ்தான் ஒரு போட்டியிலும் வென்றுள்ளன.

ஐசிசி போட்டிகளில்

ஐசிசி போட்டிகளில்

ஐசிசி போட்டிகளில் இந்தியாதான் அதிகம் வென்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக 6 உலகக் கோப்பை வெற்றி, 4 உலகக் கோப்பை டுவென்டி 20 வெற்றி, 2 சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை இந்தியா வைத்துள்ளது. இந்தத் தொடர்களில் நமக்கு எதிராக பெற்றது 2 சாம்பியன்ஸ் டிராபி வெற்றி மட்டுமே.

2 சாம்பியன்ஸ் டிராபி நமக்கு

2 சாம்பியன்ஸ் டிராபி நமக்கு

இந்தியா 2 முறை சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளது. பாகிஸ்தான் இன்னும் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. உலகக் கோப்பையை இந்தியா 2 முறை வென்றுள்ளது. பாகிஸ்தான் கணக்கு ஒருமுறை. உலக டுவென்டி 20 கோப்பையை இரு அணிகளும் தலா ஒருமுறை வென்றுள்ளன.

பார்க்கலாம் இந்தியா 3வது கோப்பையைத் தட்டிச் செல்கிறதா அல்லது பாகிஸ்தான் முதல் கோப்பையை முத்தமிடுமா என்பதை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Both the fans in India and Pakistan are all set to celebrate India Pakistan finals at the Champions trophy 2017 at London on June 18.
Please Wait while comments are loading...