இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போர்... மறக்க முடியாத அந்த 5 ஆட்டங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி இன்று லண்டன் ஓவல் மைத்தனத்தில் நடக்கிறது. இதற்கு முன்பு இந்தியா பாகிஸ்தான் ஆடிய மறக்க முடியாத 5 சர்வதேச ஒன் டே ஆட்டங்களை இங்கே காணலாம்.

1986-ம் ஆண்டு, சார்ஜா:

1986-ம் ஆண்டு, சார்ஜா:

இதில் இந்தியா நிர்ணயித்த 246 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிக் கொண்டிருந்த பாகிஸ்தானுக்கு கடைசி பந்தில் 4 ரன் தேவைப்பட்டது. கைவசம் ஒரு விக்கெட் இருந்தது. செஞ்சுரியுடன் போராடிக் கொண்டிருந்த ஜாவீத் மியாண்டட் (116 ரன்), சேத்தன் ஷர்மா புல்டாசாக வீசிய கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கியடிக்க அது ஸ்டேடியத்தை தாண்டி போய் விழுந்தது.

பாகிஸ்தானின் ஹீரோ

பாகிஸ்தானின் ஹீரோ

இதன் மூலம் பாகிஸ்தான் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. மியாண்டட் ஒரே நாளில் தங்கள் நாட்டின் ஹீரோவாகி விட, பந்து வீசிய சேத்தன் ஷர்மாவோ தாயகம் திரும்பிய போது ரசிகர்களின் வெறுப்புணர்ச்சிக்கு ஆளானார்.

உலக கோப்பை லீக் சுற்று -2003, செஞ்சூரியன் :

உலக கோப்பை லீக் சுற்று -2003, செஞ்சூரியன் :

பேட்டிங் மன்னன் சச்சின் தெண்டுல்கருக்கும், பந்துவீச்சு புயல் சோயிப் அக்தருக்கும் இடையே யார் பெரியவன் என்று பனிப்போர் நிலவிய சமயம் அது. அக்தரின் ஒரே குறி தெண்டுல்கர் தான். ஆனால் தெண்டுல்கர் அக்தரை நையபுடைத்து கதறடித்தார்.

சச்சின் சாதனை

சச்சின் சாதனை

அதுவும் அசுர வேகத்தில் ஷாட்ச்பிட்சாக வீசிய பந்தை ‘அப்பர்-கட்' செய்து அவர் சிக்சர் அடித்த விதம் இப்போதும் வியப்புடன் பேசப்படுவது உண்டு. அக்தரின் கூட்டாளிகள் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அப்துல் ரசாக் ஆகியோரும் மிரட்டிப் பார்த்தனர். தெண்டுல்கரின் (98 ரன்) சாதுர்யமான ஆட்டத்தால் இந்திய அணி 274 ரன்கள் இலக்கை 46-வது ஓவரிலேயே எட்டுவதற்கு உதவி புரிந்தது. அக்தர் 10 ஓவர்களில் 72 ரன்களை வாரி வழங்கினார்.

உலக கோப்பை அரைஇறுதி (2011, மொகாலி):

உலக கோப்பை அரைஇறுதி (2011, மொகாலி):

உலக கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆட்டம் இது தான். இரு நாட்டு பிரதமர்களும் இந்த போட்டியை நேரில் ரசித்ததுடன் அதை மையமாக வைத்து இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடத்தினர். இதற்கு மத்தியில் மொகாலியில் களம் இறங்கிய பாகிஸ்தானிடம் வேகம் இருந்ததே தவிர விவேகம் இல்லை.

பெருமையை தக்க வைத்த இந்தியா

பெருமையை தக்க வைத்த இந்தியா

4 முறை கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த சச்சின் தெண்டுல்கர் 85 ரன்கள் விளாச, இந்திய அணி பாகிஸ்தானுக்கு 261 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இந்தியாவின் அபார பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கால் பாகிஸ்தான் 49.5 ஓவர்களில் 231 ரன்னில் பணிந்தது. உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற பெருமையை இந்தியா தக்க வைத்துக் கொண்டது.

ஆசிய கோப்பை லீக் (2014, டாக்கா):

ஆசிய கோப்பை லீக் (2014, டாக்கா):

வங்காளதேசத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 8 விக்கெட்டுக்கு 245 ரன்கள் எடுத்தது. எளிதில் வெற்றி பெறுவது போல் சென்ற பாகிஸ்தானுக்கு கடைசி 10 பந்தில் 11 ரன் மட்டுமே தேவைப்பட, கைவசம் 4 விக்கெட்டுகள் இருந்தன.

முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி

ஆனால் அடுத்தடுத்து விக்கெட் சரிய பாகிஸ்தானுக்கு திடீர் சிக்கல் உண்டானது. கடைசி 4 பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்ட போது, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பந்து வீச்சில் அப்ரிடி தொடர்ச்சியாக இரு சிக்சர் அடித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 2 பந்து மீதம் வைத்த பாகிஸ்தான் 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மார்ச் 10, 1985 மெல்பர்ன் நகரம் :

மார்ச் 10, 1985 மெல்பர்ன் நகரம் :

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த ஐசிசி இறுதிப்போட்டி ஆஸ்திரேலியா மெல்பர்னில் நடந்த போட்டி அது. அதில் 8 விக்கெட்டு வித்தியாசத்தில் இந்தியா பாகிஸ்தானை வெற்றி கொண்டது. விக்ட்டோரியன் கிரிக்கெட் அசோசியேசன் நடத்திய போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிக் கனி

வெற்றிக் கனி

லெக்ஸ் ஸ்பின்னர் லக்ஸ் மன் சிவராமகிருஷ்ணன் பாகிஸ்தானை 176 ரன்கள் மட்டுமே எடுக்க விட்டார். அந்த அளவுக்கு பந்துவீச்சில் பாக். வீரர்களைக் கதறவிட்டார். அந்த ரன்களை ரவி சாஸ்திரி, ஸ்ரீகாந்த் ஜோடியே சதமடித்து எட்டி வெற்றியைப் பெற்றது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Unforgetable Five great India-Pakistan international one day matches.
Please Wait while comments are loading...