சவுரவ் கங்குலிக்கு மர்ம நபர் கொலை மிரட்டல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தற்போது மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ளார்.

Former India captain Sourav Ganguly receives death threat

இந்த நிலையில், வரும் 19ம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மித்னாப்பூரில் உள்ள வித்யாசாகர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கல்லூரிகளுக்கு இடையிலான உள்ளூர் கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் கங்குலி.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் சவுரவ் கங்குலி கொலை செய்யப்படுவார் என மர்ம நபர் ஒருவர் அவரது தாயாருக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார். கங்குலி கலந்துகொண்டால் அவரை நீங்கள் உயிருடன் பார்க்க முடியாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 7ம் தேதியன்று இந்த கடிதம் கிடைத்ததாகவும், இதன்பேரில் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். தனக்குப் பயம் ஏதும் இல்லை என்றும் கூறிய அவர், தனது தாய் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களே அதிகம் அச்சப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். சவுரங் கங்குலியின் வீட்டிற்கு மிரட்டல் கடிதம் வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former India captain Sourav Ganguly today (January 9) revealed that he has received "death threat" warning him against attending an inter-college cricket meet at the Vidyasagar University in Midnapore on January 19.
Please Wait while comments are loading...