ஐபிஎல் பைனலுக்கு போக முடியாத சோகம்.. ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த கம்பீர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: ஐபிஎல் பைனலுக்கு முன்னேற முடியாத கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் தனது ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.

நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி ஆரம்பத்தில் புயலாக புறப்பட்டது. குஜராத் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய அந்த அணி அதிரடி காட்டியது.

Gautam Gambhir's Heartfelt Message To Kolkata Fans After IPL Exit

ஆனால் இறுதி கட்டங்களில் அணி சொதப்ப ஆரம்பித்தது. குவாலிபையர்-2 போட்டியின்போது மும்பைக்கு எதிராக 107 ரன்களில் சுருண்டது அந்த அணி. இதனால் மும்பை அணி எளிதில் வென்று, பைனலுக்கு தகுதி பெற்றது.

கடைசியாக கொல்கத்தா ஆடிய கடைசி 5 லீக் போட்டிகளில் 1ல் மட்டுமே அந்த அணி வெற்றி பெற்றது. மழையினால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில், ஹைதராபாத்திற்கு எதிராக எளிய இலக்கு வாய்த்ததால்தான் அந்த அணி எலிமினேட்டரில் வென்று குவாலிபையர்-1க்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் டிவிட்டரில் கம்பீர் கூறியுள்ளதாவது. "கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் உங்களை பொறுத்தளவில், இந்த பயணம் மகிழ்ச்சியளித்திருக்காது. நாங்கள் முடிந்த அளவுக்கு முயற்சி செய்தோம். ஆனால் எங்களது முயற்சி போதிய அளவுக்கு இல்லை என நினைக்கிறேன்" என்று கம்பீர் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kolkata Knight Riders skiper Gambir wrote in Twitter, that "Tks for being a wonderful support 4 KK,but 4 u all this journey won't have been fun. Tried our best may b our best wasn't good enuff.
Please Wait while comments are loading...