ஹர்மன்பிரீத்தின் சாதனைகள் தொடரும்... தந்தை பெருமிதம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பஞ்சாப்: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 150 ரன்கள் குவித்த ஹர்மன்பிரீத்தின் சாதனை குறித்து அவரது தந்தை பெருமிதம் தெரிவித்துள்ளார்

மகளிர் ஐசிசி உலகக்கோப்பை கிரிகேட்தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடியது.

இதில் பஞ்சாப்பை சேர்ந்த 27 வயதான ஹர்மன்பிரீத் கவுர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 பவுண்டரி, 7 சிக்சருடன் 171 ரன்கள் விளாசி பிரமிக்க வைத்தார். பெண்கள் ஒரு நாள் போட்டி வரலாற்றில் ஒரு இந்திய வீராங்கனையின் 2-வது அதிகபட்சம் இதுவாகும்.

அதிகபட்ச ஸ்கோர்

அதிகபட்ச ஸ்கோர்

முன்னதாக ணுதீப்தி ஷர்மா கடந்த மே மாதம் அயர்லாந்துக்கு எதிராக 188 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அதே சமயம் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஒரு வீராங்கனையின் 4-வது அதிகபட்ச ஸ்கோராக இது பதிவானது.

எப்போதும் திறமை வாய்ந்தவர்

எப்போதும் திறமை வாய்ந்தவர்

உலக கோப்பையில் 150 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனைக்கும் ஹர்மன்பிரீத் கவுர் சொந்தக்காரர் ஆனார். ஹர்மன்பிரீத்தின் இந்த சாதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள அவரது தந்தை, அவர் எப்போதுமே திறமை வாய்ந்தவர் என குறிப்பிட்டுள்ளார்.

கனவு நிறைவேறியுள்ளது

கனவு நிறைவேறியுள்ளது

அவருடைய திறமையை சிறு வயதில் உணர்ந்தேன், விளையாட்டுகளில் தனது வாழ்க்கையை அவர் தொடர வேண்டும் என கனவு கண்டேன், அவர் தன் கனவை நிறைவேற்றுவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

ICC Women World Cup 2017: India defeat Australia to enter final, highlights-Oneindia Tamil
தொடர்ந்து ஜொலிப்பார்

தொடர்ந்து ஜொலிப்பார்

ஹர்மன்பிரீத்தின் தந்தை ஹார்மந்தர் பஞ்சாப்பின் மோகா நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கிளர்க்காக உள்ளார். இந்தியாவுக்கு தொடர் வெற்றிகளை பெற்றுதந்து ஹார்மன் ஜொலிப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்திய அணிக்கு இது ஒரு பெரிய வெற்றி என்ற அவர் இறுதிப்போட்டியிலும் இதேபோல் விளையாடி இந்திய அணி கோப்பையை வெல்ல உதவுவார் என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Harmandar Bhullar, father of Harmanpreet, it did not come as a surprise. He hoped Harmanpreet will continue to shine for India. "It was a big win for the team. Now, hopefully, she will play equally good in the final (against England) and help the team win the trophy," he said
Please Wait while comments are loading...