அப்படி அடி சபாசு... கேலி செய்த கோயங்காவையே எழுந்து நின்று கைதட்ட வைத்த டோணி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் குவாலிபையர்-1 சுற்றில் நேற்று மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, பைனலுக்கு முன்னேறியது ரைசிங் புனே அணி.

வான்கடே மைதானத்தின் பிட்ச் ஸ்லோவாக இருந்ததால், ரன் குவிக்க சக பேட்ஸ்மேன்கள் கஷ்டப்பட்டனர். பல பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க சிரமப்பட்ட போதிலும், கடைசி கட்டத்தில் டோணி அதிரடியாக 5 சிக்சர்களை விளாசி 162 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோருக்கு வித்திட்டார்.

26 பந்துகளில் டோணி விளாசிய 40 ரன்கள் கடைசி கட்டத்தில் ஸ்கோரை மளமளவென உயர்த்த உதவியது. இந்த ஸ்கோர்தான் புனே அணியின் வெற்றிக்கும் காரணமாக இருந்தது.

டோணியே காரணம்

டோணியே காரணம்

கிரிக்கெட் வல்லுநர்கள் அனைவரும் டோணியின் பேட்டிங்தான் வெற்றிக்கு காரணம் என புகழ்ந்துரைக்கும் நிலையில், புனே அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவின் சகோதரர் ஹர்ஷ் கோயங்காவும் இதை ஒப்புக்கொண்டுள்ளார்.

ஹர்ஷ் கோயங்கா கடுப்புகள்

ஹர்ஷ் கோயங்கா கடுப்புகள்

ஐபிஎல் தொடக்க காலத்தில் ஹர்ஷ் கோயங்கா, டோணியை டிவிட்டரில் மிகவும் கேலி செய்து டிவிட் செய்து வந்தார். காட்டுக்கு சிங்கம் ஸ்மித்தான் என கூறியிருந்தார். டோணி ரசிகர்கள் அவருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். அதற்காக பலரது ஐடிகளை அவர் பிளாக் செய்து வந்தார்.

பாராட்டு

ஆனால், நேற்று வான்கடே மைதானத்தில் அமர்ந்து போட்டியை பார்த்த கோயங்கா, டோணியின் பேட்டிங்கை பார்த்து வியந்து பாராட்டி டிவிட்டியுள்ளார். டோணியின் அதிரடி, வாஷிங்டன் சுந்தரின் பவுலிங் ஆகியவைதான் வெற்றிக்கு காரணம் என்று கோயங்கா டிவிட் செய்துள்ளார்.

எழுந்து நின்று பாராட்டு

நேற்றைய ஆட்டத்தை பார்த்துவிட்டு, கோயங்கா எழுந்து நின்று, கை தட்டினார். ஹேட்டர்களுக்கு பெரிய வீரர்கள் இப்படித்தான் பதிலடி கொடுப்பார்கள் என நெட்டிசன்களும் டிவிட் செய்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Explosive batting by Dhoni, deceitful bowling by Sundar and great captaincy by Smith takes RPS to the IPL finals, says Harsh Goenka.
Please Wait while comments are loading...