விஸ்வரூபம் எடுத்த ஆம்லா.. ஐபிஎல்லில் முதல் சதத்தை விளாசினார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்தூர்: மும்பை அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் வீரர் ஆம்லா அதிரடியாக சதம் விளாசினார்.

10 வது ஐபிஎல் தொடர் லீக் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தூரில் நேற்று நடைபெற்ற 22-வது லீக் போட்டியில், பஞ்சாப், மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Hashim Amla celebrates reaching his century against Mumbai.

நேற்றைய போட்டியில் அதிரடிக்கு பஞ்சம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு இரு அணி பேட்ஸ்மேன்களும் சேர்ந்து மொத்தமாக 30 பவுண்டரி விளாசியுள்ளனர். 30 பவுண்டரி மூலம் 120 ரன்களும், 24 சிக்சர்கள் மூலம் 144 ரன்கள் என ஒட்டுமொத்தமாக 264 ரன்கள் குவித்தனர்.

பஞ்சாப் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ஆம்லா 60 பந்துகளில் 6 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 104 ரன்கள் குவித்தார். மலிங்கா பந்தில் மட்டும் 51 ரன்கள் விளாசியுள்ளார் ஆம்லா. இதன்மூலம் ஒரு ஐபிஎல் போட்டியில் ஒரு வீரருக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் கோஹ்லி (எதிர்-உமேஷ், 52 ரன்கள்) தொடர்ந்து இரண்டாவது இடம் பிடித்தார்.

முன்னதாக பெங்களூர் அணிக்கு எதிராக இதே மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில், 38 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 58 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் ஆம்லா.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Amla remained unbeaten at 104 off 60 balls against Mumbai.
Please Wait while comments are loading...