கடைசி டி20: 8 ஓவர் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  இன்றைய 3வது டி-20 போட்டி நடப்பதில் சிக்கல்.. விநாயகருக்கு பூஜை! | Oneindia Tamil

  திருவனந்தபுரம்: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடக்கும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி போட்டி தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கி இருக்கிறது. இந்த போட்டியில் நியுசிலாந்து அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது

  டெல்லியில் நடந்த முதல் டி-20 போட்டி இந்திய அணியும் , ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

  Indian is playing the 3rd T20 match against New Zealand in Thiruvananthapuram

  திருவனந்தபுரத்தில் நடக்கும் மூன்றாவது போட்டியில் இந்தியா வெல்லும் பட்சத்தில் தொடரை வென்றுவிடும் என்பதால் இது மிகவும் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. 29 வருடங்களுக்கு பின் திருவனந்தபுரத்தில் ஐசிசி போட்டி நடக்க இருக்கிறது.

  காலையில் இருந்து திருவனந்தபுரம் மைதானத்தில் மழை பெய்து வருவதால் போட்டி நடைபெறுவது சந்தேகமா இருந்தது. இந்த நிலையில் இப்போது போட்டி தொடங்கி இருக்கிறது. மழை காரணமாக இரண்டரை மணி நேரம் தாமதமாக போட்டி தொடங்கி இருக்கிறது. மழையால் அணிக்கு 8 ஓவராக குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு பவுலர் தலா இரண்டு ஓவர் வீசலாம்.

  தற்போது நடக்கும் இந்த போட்டியில் நியுசிலாந்து அணி டாஸ் வென்று இருக்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The third T-20 match between India and New Zealand has started in Thiruvananthapuram, Kerala now. New Zealand won the toss against India and choose to bowl first.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற