இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி: ஓவல் மைதானத்தில் நிரம்பி வழியும் கூட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. இதனைக் காண லண்டன் ஓவல் மைதானத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டிகள் என்றாலே ஒட்டு மொத்த ரசிகர்களுக்கும் எல்லையில் நடைபெறும் போரை போல பதற்றம் தொற்றிக்கொள்ளும். இந்நிலையில் சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டியில் இரு அணிகளும் மோதி வருகின்றன.

Huge crowed in the Oval stadium at london.

மினி உலகக் கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியாவும், முதல் முறையாக பைனலுக்கு முன்னேறிய பாகிஸ்தானும் விளையாடி வருகின்றன.

இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும் இறுதிப்போட்டி உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பரம எதிரிகள் மோதும் அனல் பறக்கும் ஆட்டம் என்பதால், இப்போட்டிக்காக சூதாட்டமும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியா, பாகிஸ்தான் போட்டி என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத நிலையில், சுமார் 10 ஆண்டுக்கு பிறகு இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதுவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இரு அணிகளும் மோதும் போட்டியை காண ரசிகர்கள் குவிந்துள்ளனர். இதனால் லண்டன் ஓவல் மைதானத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Huge crowed in the Oval stadium at london. India vs Pakistan match is happening today due to this fans deployed in the stadium.
Please Wait while comments are loading...