மனன் வோரா அதிரடி வீண்.. ஹைதராபாத்திடம் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது பஞ்சாப்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஐ.பி.எல். டி20 தொடரில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற லீக் ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோற்கடித்தது.

ஹைதராபாத்தில் உள்ள ராஜுவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் மேக்ஸ்வெல் பவுலிங் செய்ய தீர்மானித்தார். இதை தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.

 Hyderabad beat Punjab by 5 runs

ஹைதராபாத் அணியில் கேப்டன் வார்னர் 54 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சர் என 70 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நமன் ஓஜா 20 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்சர் என 34 ரன்கள் எடுத்திருந்த போது கரியப்பா பந்தில் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

பஞ்சாப் அணி சார்பில் மோகித் ஷர்மா மற்றும் அக்சார் பட்டேல் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

160 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே 5 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணிக்கு மனன் வோரா மட்டும் 50 பந்தில் 5 சிக்ஸர், 9 பவுண்டரிகள் பறக்க விட்டு 95 ரன்கள் எடுத்து அசத்தினார். மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் திரும்பினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sunrisers Hyderabad (SRH) defeated King XI Punjab (KXIP) by 5 runs in a nail-biting encounter in the match 19 of IPL 2017.
Please Wait while comments are loading...