அதெல்லாம் தெரியாது, "வார்டன்"னாலே "அடி"தான்.. ஷேவாக் செம!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: எந்த அணியை விடவும் பாகிஸ்தான் அணியிடம்தான் நான் அதிக உற்சாகத்தோடு பேட் செய்துள்ளேன். பாகிஸ்தான் பந்து வீச்சை அடித்து நொறுக்குவது என்றால் எனக்கு அப்படி ஒரு ஆனந்தம் என்று கூறியுள்ளார் வீரேந்திர ஷேவாக்.

பேட்டிங்கில் அதிரிபுதிரியாக ஒரு காலத்தில் ஆடியவர் ஷேவாக். இப்போது அவர் கிரிக்கெட் வர்னணையாளராக இருக்கிறார். இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ஷேவாக்.

பாகிஸ்தான் குறித்துப் பேசியபோது, பாகிஸ்தான் பந்து வீச்சை அடித்து நொறுக்குவது எப்போதுமே தனக்குப் பிடித்த ஒன்று என்று கூறினார்.

அடித்து துவைக்கப் பிடிக்கும்

அடித்து துவைக்கப் பிடிக்கும்

இதுகுறித்து ஷேவாக் கூறுகையில், பாகிஸ்தான் பந்து வீச்சை வெளுப்பது என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். குறிப்பாக சோயப் அக்தரின் பந்துகளை பிரித்து எடுக்க ரொம்பப் பிடிக்கும். அவரது பந்துகளில் தொடர்ந்து பவுண்டரிகள் அடிக்க முயற்சிப்பேன்.

பவுண்டரி அடிக்க ஏற்ற அணி

பவுண்டரி அடிக்க ஏற்ற அணி

பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களின் பந்துகளைத்தான் நான் அதிக அளவில் பவுண்டரி விளாசியுள்ளேன் என்று நினைக்கிறேன். சோயப் அக்தரெல்லாம் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசக் கூடியவர். ஆனால் அந்தப் பந்திலும் நான் பவுண்டரி அடித்துள்ளேன்.

லத்தீப் குறித்து கருத்து கூற விரும்பவில்லை

லத்தீப் குறித்து கருத்து கூற விரும்பவில்லை

பாகிஸ்தானின் லத்தீப் என்னைப் பற்றிப் பேசியுள்ளது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இதுபோல பேசுவதன் மூலம் தனது கேரக்டர் என்ன என்பதை லத்தீப்பே வெளிப்படுத்துகிறார்.

இந்தியா ஜெயிக்கும்

இந்தியா ஜெயிக்கும்

சாம்பிய+ன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவே வெல்லும். கோப்பையுடன் தாயகம் திரும்பும் என்று நம்புகிறேன். பாகிஸ்தானை வெல்வது கடினமாக இருக்காது என்றார் ஷேவாக்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former cricket player Sehwag has said that he always wanted to hit boundaries in Pak bowling. " I loved to hit them" he opined.
Please Wait while comments are loading...