For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சாம்பியன்ஸ் டிராபி: வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

By Karthikeyan

லண்டன்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் 'ஏ' பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து, வங்கதேசத்தை எதிர்கொண்டது.

 ICC Champions Trophy 2017: Root's unbeaten 133 helps England thrash Bangladesh by 8 wickets

டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய வங்கதேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தமீம் இக்பால் 142 பந்துகளில் 128 ரன்களும், முஸ்பிகுர் ரஹிம் 72 பந்தில் 79 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் பிளங்கெட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து 306 ரன்கள் என்ற வெற்றி இலக்கை விரட்டிய களமிறங்கியது இங்கிலாந்து. அந்த அணி 47.2 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக ஹேல்ஸ் 95 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். ஜோ ரூட் 133 (129 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்), மார்கன் 75 (61 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வங்கதேசம் தரப்பில் மொர்டசா, சபிர் ரஹ்மான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். சதம் விளாசிய ஜோ ரூட் ஆட்டநாகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Story first published: Friday, June 2, 2017, 1:02 [IST]
Other articles published on Jun 2, 2017
English summary

 Joe Root breezed to his 10th ODI hundred as title favourites England began their tournament campaign with an eight-wicket thrashing of Bangladesh in the Champions Trophy opener here on Thursday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X