சொதப்பல் பவுலிங்.. மோசமான பீல்டிங்.. சமான் போட்ட சதம்.. இந்தியா - பாக் பைனல் ஹைலைட்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டியில் பகார் சமான் அபாரமாக ஆடி சதம் அடித்தார்.

முதலில் ஆடிய பாகிஸ்தான் 338 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து 339 ரன்களை எடுத்தால் மட்டுமே வெற்றி பெறும் நிலையில் இந்தியா உள்ளது.

ICC Champions Trophy Final: Highlights: India Vs Pakistan: Centurion Fakhar Zaman shines

இப்போட்டியின் ஹைலைட்ஸ்:

பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்களை எடுத்தது

ஐசிசி ஒருநாள் போட்டியில் மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை ஷதாப் கான் (18 வயது, 257 நாள்கள்) பெற்றார்.

யுவராஜ் சிங் கடந்த 2000-ஆம் ஆண்டு விளையாட வரும் போது 18 வயது 308 நாள்களாகும்.

பும்ரா பந்துவீச்சில் பாகர் சமான் (3) அவுட் ஆகியும் நோ பால் என்பதால் தப்பினார்.

பும்ரா 11 நோ பால்களை வீசினார்.

ஐசிசி 2017-இல் புவனேஷ்வர் குமார் 4 மெயிடன் ஓவர்களை கொடுத்து சாதனை படைத்தார். இது எந்த பவுலரும் செய்யாதது.

இந்தியாவுக்கு எதிராக களத்தில் இறங்கிய அசார் அலி மற்றும் பகார் சமான் அதிக ரன்களை குவித்தனர்.

60 பந்துகளில் அசார் அலி அரைசதம் அடித்தார். அதோபோல் பகார் சமாரும் 61 பந்துகளில் அரை சதம் எடுத்தார்.

அசார் அலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 12 அரைசதங்களை அடித்துள்ளார்.

59 ரன்களை எடுத்த அசார் அலி பும்ராவால் ரன் அவுட் ஆனார்.

கடந்த 1992-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இம்ரான் கான் 72 ரன்களை அதிகபட்சமாக குவித்தார்.

அதேபோல் 89 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்த பகார் சமான் ஐசிசி போட்டிகளில் அதிக ரன்களை குவித்த ஆட்டக்காரர் ஆவார்.

பும்ரா வீசிய பந்தில் அவுட்டாகாமல் தப்பினார் சமான்.

தப்பிப் பிழைத்த அவர் பின்னர் அதிரடியாக ஆடி 96 பந்துகளில் சதம் போட்டார்.

சாம்பியன் டிராபியில் பாகிஸ்தானுக்காக பகார் சமான், சயீத் அன்வர், ஷோயப் மாலிக் ஆகியோர் சதம் அடித்த வீரர்கள் ஆவர்.

114 ரன்களை குவித்த பகார் சமான் ஹார்டிக் பான்ட்யா வீசிய பந்தால் அவுட் ஆனார்.

ரவீந்திர ஜடேஜா அபாராமாக கேட்ச் பிடித்தார்.

ஷோயப் மாலிக் 12 ரன்களை குவித்த நிலையில் அவரை கேதார் ஜாதவ் வீழ்த்தினார்

முகமது ஹபீஸ் 37 பந்துகளில் 57 ரன்களை குவித்தார். இது பாகிஸ்தான் 338 ரன்களை பெற காரணமாயிற்று.

இந்திய பவுலர்களிலேயே புவனேஷ்வர் குமார் சற்று சிறப்பாக பநது வீசினார். 10 ஓவர்களில் 44 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

10 ஓவர்களில் அஸ்வின் 70 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

ரவீந்திர ஜடேஜா 8 ஓவர்களில் 67 ரன்களை கொடுத்தார்.

9 ஓவர்களில் பும்ரா 68 ரன்களை கொடுத்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Riding over brilliant century from Fakhar Zaman, Pakistan scored 338/4 against India in the final of the ICC Champions Trophy 2017 on sunday. Here are the highlights from the match between India and Pakistan.
Please Wait while comments are loading...