சாம்பியன்ஸ் டிராபி பைனலன்று கும்ப்ளே-கோஹ்லி போட்ட சண்டை.. வெளியான ஷாக் தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் நடுவேயான சாம்பியன்ஸ் டிராபி பைனல் போட்டியில் டாஸ் போடுவதற்கு முன்பாக கேப்டன் கோஹ்லி மற்றும் பயிற்சியாளர் கும்ப்ளே நடுவே கடும் வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பைனல் போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி மோசமாக தோற்றது. இப்போட்டியில் டாஸ் போடப்படும் முன்பாக அனில்கும்ப்ளேயிடம், கேப்டன் கோஹ்லி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தற்போது சில தகவல்கள் வெளியகியுள்ளன.

பல வாரங்களாகவே அனைத்து ஊடகங்களும் கோஹ்லி-கும்ப்ளே மோதல் குறித்து செய்தி வெளியிட்டு வருகின்றன. அதை மெய்ப்பிக்கும் வகையில் நேற்று கும்ப்ளே அறிக்கையொன்றின் மூலம் தான் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதை அறிவித்தார்.

இந்த நிலையில், டாஸ் வீசப்படும் முன்பாக கோஹ்லிக்கும், கும்ப்ளேவுக்கும் மோதல் ஏற்பட்டது அம்பலமாகியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India skipper Virat kohli allegedly involved in a verbal spat with coach Anil Kumble in the dressing room before toss in the final of Champions Trophy 2017 between India and Pakistan.
Please Wait while comments are loading...