வங்கதேச ரசிகர்கள் ரொம்பக் கேவலமா இருக்காங்களே.. !

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: வங்கதேச ரசிகர்கள் ரொம்பக் கேவலமாக இருக்கிறார்கள். பாகிஸ்தான் ரசிகர்கள் கூட பக்குவமாக நடந்து கொள்வார்கள் போல. இந்த வங்கதேசத்து ரசிகர்களின் அலம்பல்களுக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டுள்ளது.

தேவையே இல்லாமல் இந்தியாவை தொடர்ந்து வம்பிழுத்துக் கொண்டுள்ளனர். முன்பு டோணியை அவமானப்படுத்தினர். பின்னர் இந்திய தேசியக் கொடியை இழிவுபடுத்தினர். இப்போது விராத் கோஹ்லியை நாயுடன் ஒப்பிட்டு தங்களது தரத்தை மேலும் பல படிக்கு தாழ்த்திக் கொண்டுள்ளனர்.

ICC Champions Trophy : Virat Kohli compared to dog by Bangladeshi fans

இந்தியா வங்கதேசம் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. அப்போது இந்தியா பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம் அவுட்டானதும் கேப்டன் கோஹ்லி அதை கொண்டாடி மகிழ்ந்தார்.

முன்பு டோணியை கிண்டலடித்து டிவீட் போட்டிருந்தார் ரஹீம். அதை மனதில் வைத்து நாக்கை வெளியே தள்ளியபடி கேலி செய்து தனது மகிழ்ச்சியைக் கொண்டாடினார் கோஹ்லி. இதையடுத்து நாயுடன் கோஹ்லியை ஒப்பிட்டு வங்கதேச ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களைத் தாங்களே அசிங்கப்படுத்திக் கொண்டுள்ளனர்.

ஓவர் அலம்பலா இருக்குதேப்பா..!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In a shameful incident Bangladeshi fans compared Indian skipper Virat Kohli to a dog. The shameful act started after Kohli teased Mushfiqur Rahim after catching him out. In another shameful act, a Bangladeshi newspaper had posted a photo of Indian batsmen with their heads shaved and Mustafizur Rahman holding a barber's knife.
Please Wait while comments are loading...