For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கப் போனாலும் கிங்தான்.. ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவைவிட இந்தியா டாப்

By Veera Kumar

துபாய்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்தபோதிலும், ஐசிசி தரவரிசையில் இந்தியா 2வது இடத்தில் தொடருகிறது. அணியின் முக்கிய பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி பேட்டிங் வரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். டிவில்லியர்ஸ் முதலிடத்திலுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, 3-2 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. இந்நிலையில் நேற்று ஐசிசியின் புதிய தரவரிசை பட்டியல் வெளியானது.

இந்தியா 2வது

இந்தியா 2வது

இந்த தரவரிசை பட்டியலில் அணிகள் அடிப்படையில் இந்தியா தனது 2வது, இடத்தை தக்க வைத்துள்ளது. 3வது இடத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. ஆனால் இரு அணிகள் நடுவேயான புள்ளிகள் வித்தியாசம், 2 என்ற அளவில் குறைந்துள்ளது. ஆஸ்திரேலியா முதலிடத்தில் தொடருகிறது.

கோஹ்லிக்கு 2வது இடம்

கோஹ்லிக்கு 2வது இடம்

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், இந்தியாவின் கோஹ்லி 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில், ஒரு சதம் மற்றும், அரை சதம் விளாசி அந்த இடத்திற்கு அவர் முன்னேறியுள்ளார்.

டிவில்லியர்ஸ் டாப்

டிவில்லியர்ஸ் டாப்

தென் ஆப்பிரிக்க ஒன்டே அணி கேப்டன், டிவில்லியர்ஸ் முதலிடத்தில் தொடருகிறார். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் 104, 112, 119 ரன்கள் என மொத்தம் 3 சதங்கள் விளாசியிருந்தார். எனவே அசைக்க முடியாத இடத்தில் அவர் உள்ளார்.

டோணி முன்னேற்றம்

டோணி முன்னேற்றம்

தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா, 3 இடங்கள் பின்தங்கி 5வது ரேங்கிற்கு தள்ளப்பட்டுள்ளார். நடப்பு சீரிசில் அவர் ரன் குவிக்காதது இதற்கு காரணம். அதேநேரம், டோணி 2 இடம் முன்னேறி, 6வது ரேங்கிலுள்ளார். தென் ஆப்பிரிக்காவின், பாப் டுப்ளசிஸ் இத்தனை வருடங்களில் முதல்முறையாக 10வது ரேங்கிற்கு முன்னேறி சக நாட்டு வீரரான டிகாக்குடன் அந்த இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

ரஹானே, அஸ்வின்

ரஹானே, அஸ்வின்

ரோகித் ஷர்மா 3 இடங்கள் முன்னேறி, 12வது ரேங்கிலும், ரஹானே, 11 இடங்கள் முன்னேறி, 27வது ரேங்கிலும் உள்ளனர். ரஹானேவுக்கு இது கேரியர் பெஸ்ட் ரேங்க் ஆகும். தென் ஆப்பிரிக்க பவுலர்கள், ஸ்டெயின் 6வது இடத்திலும், மோர்க்கல் 8வது இடத்திலும் உள்ளனர். அஸ்வினுக்கு 10வது ரேங்க்.

Story first published: Tuesday, October 27, 2015, 10:42 [IST]
Other articles published on Oct 27, 2015
English summary
The series loss to South Africa notwithstanding, India held on to their second spot in the team list, while star batsman Virat Kohli rose up a rung to second in the batsmen's table of the latest ICC ODI cricket rankings issued today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X