ஐசிசி டெஸ்ட் தரவரிசை.. மீண்டும் முதலிடம் பிடித்தார் அஸ்வின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆல்ரவுண்டர் வரிசையில் தமிழக வீரர் அஸ்வின் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் 2ம் இடத்தில் இருந்த இந்திய கேப்டன் விராட் கோஹ்லி 847 புள்ளிகளுடன் 4ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ICC Rankings: R Ashwin becomes No. 1 Test all-rounder again

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மிதி 936 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். 869 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சனும், அவருக்கு அடுத்த இடத்தில் 848 புள்ளிகளுடன் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 3-வது இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் 892 புள்ளிகளுடன் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்கள் அஷ்வினும், ஜடேஜாவும் முதலிடத்தில் தொடர்கின்றனர்.

அதேவேளையில் ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் 434 புள்ளிகளுடன் அஸ்வின் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் 403 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India's star offspinner Ravichandran Ashwin has reclaimed the top position in the ICC Test All-rounders' Rankings released today
Please Wait while comments are loading...