அல்லாஹ் எங்கள் துஆவை நிறைவேற்றிவிட்டார்: ஐசிசி வெற்றியை கொண்டாடும் பாக்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

கராச்சி: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை அந்நாட்டவர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி கோஹ்லி தலைமையிலான இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

ICC victory: Pakistan in celebration mood

இதையடுத்து தங்கள் அணியின் வெற்றியை பாகிஸ்தானியர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறும் என்று நினைக்கவே இல்லை. ஆனால் நினைக்காதது நடந்துவிட்டது என்று கராச்சியை சேர்ந்த ஹாரிஸ் அலி தெரிவித்தார்.

பெஷாவர் நகரில் ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் வந்து பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடினர். அல்லாஹ் தங்களின் பிரார்த்தனையை நிறைவேற்றிவிட்டதாக அந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அமல் கான் தெரிவித்தார்.

க்வெட்டா நகரில் ஆயிரக்கணக்கானோர் கூடி பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டனர். மேலும் இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
People of Pakistan are in celebration mood after their team defeated team India by 180 runs in the ICC champions trophy final on sunday.
Please Wait while comments are loading...