இங்கிலாந்தை தாக்கும் மகளிர் கிரிக்கெட் புயல்.. காணத் தயாராகுங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் ஒரு வழியாக ஓய்ந்து விட்ட நிலையில் அடுத்து மகளிர் உலகக் கோப்பைப் போட்டிக்கு இங்கிலாந்து தயாராகி விட்டது. ரசிகர்களும்தான்.

இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகள் இதில் கலந்து கொள்கின்றன. 21 நாட்கள் போட்டி நடைபெறவுள்ளது. 28 போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஜூன் 24ம் தேதி போட்டிகள் தொடங்குகின்றன. ரவுண்ட்ராபின் முறையில் போட்டிகள் நடைபெறும். பிரிஸ்டல், டெர்பி, லீசெஸ்டர், டான்டன் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஜூலை 18

ஜூலை 18

ஜூலை 18ம் தேதி பிரிஸ்டலில் முதல் அரை இறுதிப் போட்டியும், 20ம் தேதி டெர்பியில் 2வது அரை இறுதியும் நடைபெறும். 23ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறும்.

இந்தியா

இந்தியா

இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா , மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய நாடுகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்கின்றன.

வார்ம் அப் போட்டிகள்

வார்ம் அப் போட்டிகள்

இப்போட்டித் தொடரில் தற்போது வார்ம் அப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 24ம் தேதி முதல் மெயின் போட்டிகள் நடைபெறும்.

இந்தியா வெல்லட்டும்

இந்தியா வெல்லட்டும்

சாம்பியன்ஸ் டிராபியில்தான் இந்தியா தோற்றுப் போனது. இந்தியா இதிலாவது வெல்ல இப்போதே நாம் பிரார்த்தனைகளைத் தொடங்கலாம் ரசிகர்களே!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Not it is the time for World cup, yes England are getting ready to host the ICC Women’s World Cup 2017 Trophy, which begins on June 24.
Please Wait while comments are loading...