ஏதோ பாண்ட்யா மட்டும் இல்லைன்னா.. 100ஐக் கூட தாண்டியிருக்காது இந்தியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாண்ட்யா மட்டும் நின்று ஆடவில்லை என்றால் இந்தியா 100 ரன்களை கூட பெற்றிருக்காது.

லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையே இறுதி போட்டி நடைபெற்றது. அப்போது முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி கலக்கலாக ஆடி 338 ரன்களை குவித்தது.

இதை தொடர்ந்து 339 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா அணி களமிறங்கியது. முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா (டக் அவுட்) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களம் கண்ட முன்னணி ஆட்டக்காரர்களான டோனி, கோஹ்லி உள்ளிட்டோர் ஒற்றை இலக்க ரன்களுடன், யுவராஜ் சிங் 15 ரன்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

ஜடேஜா சுயநலம்

ஜடேஜா சுயநலம்

இதைத் தொடர்ந்து விளையாடிய பான்ட்யா குறைந்த பால்களில் அதிக ரன்களை குவித்தார். பவுண்டரிகள், சிக்ஸர்கள் என தூள் கிளப்பினார். இப்படியே பாகிஸ்தான் வீரர்களே அசரும் அளவுக்கு விளாசிய பாண்ட்யா, சக வீரர் ஜடேஜாவின் சுயநலத்தால் அவுட் ஆகிவிட்டார்.

அபார ஆட்டம்

அபார ஆட்டம்

பாண்ட்யா 43 பந்துகளில் 76 ரன்களை எடுத்தார். அவர் மட்டும் இல்லையென்றால் இந்தியா இரட்டை இலக்க ரன்களை தாண்டியிருக்காது என்று ரசிகர்கள் கருதுகின்றனர். மேலும் ஜடேஜா பாதகம் இழைக்காமல் இருந்திருந்தால் பாண்ட்யா மேலும் பல ரன்களை குவித்திருப்பார்.

பவுலர்களால் கூட வெற்றி

பவுலர்களால் கூட வெற்றி

கடந்த 1990-களில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் பவுலர்களான வெங்கடேஷ் பிரசாத், கும்ப்ளே, ஸ்ரீநாத் உள்ளிட்டோரும் தங்களால் இயன்ற அளவுக்கு ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கும் கூட காரணமாகியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் குமுறல்

ரசிகர்கள் குமுறல்

என்னதான் ஹாக்கியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலும், கிரிக்கெட்டில் அதன் பேட்டிங்கும், பீல்டிங்கும், பவுலிங்கும் பெரிய சொதப்பல் என்று ரசிகர்கள் குமுறுகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
If Pandya was not stood and played in the yesterday's match, India would have get its scores in 2 digits only.
Please Wait while comments are loading...