3-வது டெஸ்ட்: இந்திய அணி 603/9க்கு டிக்ளேர்- ஆஸி.யை விட 152 ரன்கள் முன்னிலை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா அணியைவிட இந்தியா 152 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 451 ரன்களைக் குவித்தது.

India declare for 603/9

பின்னர் ஆடிய இந்திய அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் எடுத்திருந்தது. இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் சஹா, புஜாரா ஜோடி அபராதத்தை வெளிப்படுத்தியது.

233 பந்துகளை எதிர்கொண்ட சஹா அதிரடியாக சதமடித்தார். புஜாரா இரட்டை சதமடித்தார். மொத்தம் 521 பந்துகளை எதிர்கொண்ட புஜாரா 202 ரன்களைக் குவித்தார். சஹா 117 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 603 ரன்களைக் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. தற்போது ஆஸ்திரேலிய அணியைவிட இந்திய அணி 152 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India declared first innings at 603 for 9 taking a lead of 152 runs against Australia in 3rd cricket Test in Ranchi.
Please Wait while comments are loading...