For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாயத் துடிக்கும் பாக்... வழக்கம் போல வெளுக்கக் காத்திருக்கும் இந்திய வீராங்கனைகள்!

லண்டன்: இதுவரை இந்தியாவை ஒரு, ஒரு நாள் போட்டியில் கூட பாகிஸ்தான மகளிர் அணி வீழ்த்தியதில்லை என்ற வரலாற்றுடன், உலகக் கோப்பைப் போட்டிகளில் முதல முறையாக இரு அணிகளும் சந்திக்கவுள்ளன.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை இந்தியாவும், பாகிஸ்தானும் மோதியதில்லை. இந்த முறை முதல் முறையாக இரு அணிகளும் சந்திக்கவுள்ளன.

அதை விட விசேஷம் என்னவென்றால் இதுவரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒருமுறை கூட இந்தியாவை ஒரு நாள் போட்டிகளில் தோற்கடித்ததில்லை என்பதுதான். ஆடவர் அணிகள் இரண்டும் மோதினால் ஆக்ரோஷம் மிஞ்சி நிற்கும். அதற்கு சற்றும் குறையாத ஆவேசம் மகளிர் மோதலிலும் காணப்படுவது இன்று முக்கிய அம்சமாகும்.

ஜூலை 2ல் மோதல்

ஜூலை 2ல் மோதல்

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஜூலை 2ம் தேதி தங்களது லீக் போட்டியில் மோதவுள்ளன. உலகக் கோப்பைப் போட்டி ஒன்றில் இரு அணிகளும் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

தோல்வியே அறியாத இந்தியா

தோல்வியே அறியாத இந்தியா

இந்தியா இதுவரை ஒரு நாள் போட்டிகளில் பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை. அந்த வரலாற்றை உலகக் கோப்பையிலும் அது தொடரும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

செம டீம்

செம டீம்

இந்திய அணி படு ஸ்டிராங்காக உள்ளது. கேப்டன் மித்தாலி ராஜ் ஒரு சாதனையாளர். அந்தப் பக்கம் அபாரமான பந்து வீச்சாளராக அனுபவம் வாய்ந்த ஜூலன் கோஸ்வாமி உள்ளார்.

சூப்பர் ஜூலன்

சூப்பர் ஜூலன்

ஜூலன் கோஸ்வாமிதான் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய சாதனையாளர். அவரது வேகப் பந்து வீச்சு நமது அணிக்கு மிகப் பெரிய பலமாகும்.

திறமைக் குவியல்

திறமைக் குவியல்

இவர்கள் தவிர அதிரடி நாயகி ஹர்மன்ப்ரீத் கவுர், ஏக்தா பிஷ்த், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஸ்மிருதி மந்தனா, மோனா என திறமையாளர்கள் இந்திய அணியில் குவிந்துள்ளனர்.

கடும் போட்டி தரும் பாகிஸ்தான்

கடும் போட்டி தரும் பாகிஸ்தான்

அதேசமயம், பாகிஸ்தான் அணியும் சாமானியமானதாக இல்லை கேப்டன் சனா மிர் ஒரு சிறப்பான ஆல்ரவுண்டர். பாகிஸ்தான் அணியை சமீப காலமாக திறமையாக வழி நடத்தி வருகிறார்.

துருப்புச் சீட்டு பிஸ்மா

துருப்புச் சீட்டு பிஸ்மா

கேப்டன் சனாவின் துருப்புச் சீட்டு பிஸ்மா மஹரூப். அபாரமான ஆல்ரவுண்டர். வார்ம் அப் போட்டியில் தனது பேட்டிங் திறமையை முழுமையாக காட்டி பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார். இவர்கள் தவிர நயின் அபிதி திறமையான பேட்ஸ்வுமன். அவரும் பாகிஸ்தான் அணிக்கு வலுவான நம்பிக்கையாக உள்ளார்.

மொத்தத்தில் ஆண்கள் போட்டிக்கு சமமான அனலை இந்தப் போட்டியிலும் நிச்சயம் பார்க்கலாம் என்று நம்பலாம்.

Story first published: Friday, June 23, 2017, 18:07 [IST]
Other articles published on Jun 23, 2017
English summary
Indian women are all set to clash with their Pakistan counterpart for the first time in the Women's world cup cricket series. Bot the teams will face each other on July 2.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X