இந்தியாவிடமிருந்து கைழுவியது சாம்பியன்ஸ் டிராபி.. ரசிகர்கள் பெரும் சோகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்தில் 339 ரன்களை எடுத்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையில் இருந்த இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.

சர்வதேச சான்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி லண்டனில் உள்ள பிர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லீக் போட்டியில் ஏ பிரிவில் மோதிய நான்கு அணிகளில் இங்கிலாந்தும், வங்கதேசமும் வெற்றி பெற்றது.

அதேபோல் பி பிரிவில் இந்தியாவும், பாகிஸ்தானும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இங்கிலாந்தை 8 விக்கெட் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று இறுதி போட்டியில் மோதின.

India has to get 339 runs to win the trophy

ஓவல் மைதானத்தில் டாஸ் போடப்பட்டது. இந்தியா டாஸில் வென்ற நிலையில் முதலில் பேட்டிங் செய்ய பாகிஸ்தானை அழைத்தது. இதைத் தொடர்ந்து முதல் 128 ரன்களில், அதாவது 23-ஆவது ஓவர் வரை பகாரும், அசாரும் அபாரமாக விளையாடினர்.

இதைத் தொடர்ந்து அசார் ரன் அவுட் ஆனார். அடுத்தது 34-ஆவது ஓவரில் 202 ரன்கள் குவித்த நிலையில் பகார் அவுட் ஆனார். பின்னர் 40-ஆவது ஓவரில் மொத்தம் 247 ரன்கள் எடுத்த நிலையில் ஷோயப் அவுட் ஆனார். 43-ஆவது ஓவரில் பாபர் அவுட் ஆனார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹபீஸ் அதிவேகமாக 56 ரன்களை குவித்தார். 50 ஓவர்கள் முடிந்த நிலையில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு பாகிஸ்தான் 338 ரன்களை எடுத்துள்ளது. ஐசிசி கோப்பையை கைப்பற்ற இந்தியா 339 ரன்களை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும் என உலகமே எதிர்பார்த்து வந்த நிலையில் பாகிஸ்தானின் அபார ஆட்டத்தால் இந்திய ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். எனினும் இந்தியாவின் முன்னோடி ஆட்டக்காரர்களான டோனி, கோஹ்லி, யுவராஜ் சிங் உள்ளிட்டோர் அபாரமாக விளையாடி பாகிஸ்தானை வீழ்த்துவர் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆனால் தொடக்கத்திலேயே முன்னணி ஆட்டக்காரர்கள் அவுட் ஆகினர். அதோடு இந்தியாவின் கனவும் தகர்ந்தது. ஆனால் பான்ட்யா சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். எனினும் அவரும் அவுட் ஆனதால் நம்பிக்கை தகர்ந்தது. இறுதியில் 10 விக்கெட் இழப்புக்கு இந்தியா 158 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து கோப்பையை நழுவ விட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ICC Champions trophy: India has to win 339 runs to get Trophy.
Please Wait while comments are loading...