மே.இ.தீவுகள் சுற்றுப் பயணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு! ரோகித் ஷர்மாவை கழற்றிவிட்ட தேர்வாளர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செல்ல உள்ள இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

20ம் தேதி லண்டனிலிருந்து கிளம்பும் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் ஜூன் 23ம் தேதி முதல் தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்பிறகு 1 டி20 போட்டி நடைபெற உள்ளது.

India include Rishabh Pant and Kuldeep Yadav for ODI tour of West Idies

ஜூலை 10ம் தேதி இந்திய அணி தாயகம் திரும்புகிறது. இந்த தொடருக்கான கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடர் நிறைவடையும் வரை பயிற்சியாளராக இருப்பார் என ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துவிட்டது.

அணி விவரம்: கோஹ்லி-கேப்டன், தவான், ரிஷப் பந்த், ரஹானே, டோணி, யுயவராஜ்சிங், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், ஜடேஜா, ஷமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர்குமார், குல்தீப் யாதவ், தினேஷ் கார்த்திக்.

இந்த அணியில் ஐபிஎல் தொடரில் கலக்கிய ரிஷப் பந்த்துக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. குல்தீப் யாதவும் இடம் பிடித்துள்ளார். பும்ராவுக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் ஷர்மா காயத்திலிருந்து மீண்டு நீண்ட நாட்கள் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அவருக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India include Rishabh Pant and Kuldeep Yadav for ODI tour of West Indies, Rohit Sharma, Jasprit Bumrah rested
Please Wait while comments are loading...