எத்தனை டிவி உடையப் போகுதோ.. 10 வருஷத்துக்குப் பிறகு இந்தியாவை பைனலில் சந்திக்கும் பாக்.!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் ஐசிசி இறுதிப் போட்டி ஒன்றில் சந்திக்கவிருப்பதால் இரு நாடுகளிலும் பரபரப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் பஞ்சமே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதை விட முக்கியமாக இரு நாடுகளின் இந்த இறுதிப் போட்டியில் ஏகப்பட்ட சுவாரஸ்ய சமாச்சாரங்கள் பொதிந்து கிடக்கின்றன.

இரு நாட்டு ரசிகர்களுக்கும் பெரும விருந்தாக அமையப் போவது இந்தப் போட்டி மட்டுமல்லாமல், இவர்கள் இதுவரை மோதிய இறுதிப் போட்டிகளின் பின்னோட்டமும் தனி விருந்தாக அமைந்துள்ளது.

2வது ஐசிசி இறுதிப் போட்டி

2வது ஐசிசி இறுதிப் போட்டி

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ள 2வது ஐசிசி இறுதிப் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இரு அணிகளும் 2007ம் ஆண்டு நடந்த ஐசிசி டுவென்டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதின.

2007ல் கடைசி போட்டி

2007ல் கடைசி போட்டி

2007ல் நடந்த ஐசிசி டுவென்டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிதான் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய கடைசி இறுதிப் போட்டியாகும். அதில் டோணி தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது.

முதல் சந்திப்பு 85ல்

முதல் சந்திப்பு 85ல்

இரு அணிகளும் 1985ம் ஆண்டு முதல் இறுதிப் போட்டியில் சந்தித்தன. 1985 உலக சாம்பியன்ஷிப் போட்டிதான் இவர்களின் முதல் பைனல் சந்திப்பு. மெல்போர்னில் நடந்த அப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

அதிக வெற்றி பாகிஸ்தானுக்கே

அதிக வெற்றி பாகிஸ்தானுக்கே

இரு தரப்பும் மோதிய இறுதிப் போட்டிகளில் அதிக முறை வென்றது பாகிஸ்தான்தான். அதாவது 7 முறை பாகிஸ்தான் வென்றுள்ளது. 4 முறை இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இந்த நூற்றாண்டில் 3வது இறுதிப் போட்டி

இந்த நூற்றாண்டில் 3வது இறுதிப் போட்டி

இந்த நூற்றாண்டு பிறந்த பிறகு இரு அணிகளும் இதுவரை 2 முறை மட்டுமே (2007, 2008) இறுதிப் போட்டியில் சந்தித்துள்ளன. தற்போது 3வது முறையாக மோதவுள்ளன. காரணம், அதிக அளவிலான போட்டிகளில் முன்பு போல விளையாடாமல் இருப்பதால்!

பெரும் எதிர்பார்ப்பு

பெரும் எதிர்பார்ப்பு

இப்படி இரு அணிகளின் இறுதி மோதல் கதையில் ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் இருப்பதால் இந்த இறுதிப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை இரு தரப்பிலும் ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India and Pakistan teams are meeting in an ICC final after 10 long years. Last time they met each other in the 2007 ICC Twenty Twenty WC finals.
Please Wait while comments are loading...