For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நம்ம தல டோணிக்கு பெரிய விசில் போடுங்க…!

By Staff

கண்டி: 2019ம் ஆண்டு இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான ஆண்டாகும். அரசியல்வாதிகளுக்கு, லோக்சபா தேர்தல் வருகிறது. அதில் நாங்கள் தான் ஆட்சியைப் பிடிப்போம் என்று தற்போதே கூவிக் கொண்டு பிரசாரத்தையும் துவக்கிவிட்டனர்.

விளையாட்டு செய்தியில் அரசியலா என்றால், சும்மா ஒரு சின்ன முன்னோட்டம் தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகின்றன.

அதுபோலத்தான், 2019ல் நடக்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தற்போதே தயாராக வேண்டும். அந்தப் போட்டிக்கான அணியை தேர்வு செய்வதுடன், மிக முக்கியமான போட்டியில் நெருக்கடிகளை சமாளிக்கும் திறனை இளம் வீரர்களுக்கு வழங்க வேண்டும்.

இளம் அணியின் வெற்றி

இளம் அணியின் வெற்றி

தற்போது, இலங்கைக்கு சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுவிட்டது. 5 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில், 3-0 என்ற வென்றுள்ளது.

ரெய்னா - யுவராஜ்

ரெய்னா - யுவராஜ்

இந்தத் தொடருக்கு முன்பாக, அணி தேர்வின்போது, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு, உடல்தகுதி இல்லை என்று வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

தல டோணி

தல டோணி

கிரிக்கெட்டின் தல டோணி அணியில் சேர்க்கப்பட்டாலும், அவர் அணியில் தொடர்வது அவருடைய உடல்தகுதியைப் பொறுத்தே என்று தேர்வு குழுவினர் கூறினர்.

டோணிதான்

டோணிதான்

இதுவரை நடந்த மூன்று ஒருதினப் போட்டிகளில், இரண்டில் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது டோணிதான். நடுவரிசை வீரராக களமிறங்கி, பேட்டிங்கில் தனது அனுபவத்தை அவர் காட்டினார். இதன் மூலம் தனது விமர்சகர்களுக்கு கேப்டன் கூல், கூலாக பதிலளித்துள்ளார்.

2019ல் இருப்பாரா

2019ல் இருப்பாரா

தற்போது, 36 வயதாகும் மகேந்திர பாகுபலி.. ஸாரி ஸாரி.. மகேந்திர சிங் டோணி, 2019 உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் இருப்பாரா என்பதைவிட, வயதான அவர் தேவையா என்று சிலர் கூறுகின்றனர்.

அனுபவசாலி அவர்தான்

அனுபவசாலி அவர்தான்

"தற்போது உள்ள இந்திய அணியில், மிகவும் அனுபவசாலி டோணி. தோல்வியின் விளிம்பில் இருந்தாலும், அதை எப்படி வெற்றியாக மாற்ற வேண்டும் என்ற சூத்திரம் தெரிந்தவர். அவர், உலகக் கோப்பை அணியில் இருப்பது, அணிக்கு மிகப் பெரிய பலமாக இருக்கும். அவர் தவிர்க்க முடியாதவர்" என்று, முன்னாள் அதிரடி ஓபனிங் பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

மாற்று யாரும் இல்லை

மாற்று யாரும் இல்லை

பேட்டிங் மட்டுமல்லாமல், விக்கெட் கீப்பிங் செய்வதற்கு, டோணிக்கு மாற்றாக யாரும் உருவாகவில்லை என்கிறார் சேவாக். விக்கெட் கீப்பிங்கில் டோணி இடத்தை ரிஷப் பந்த் நிரப்ப முடியும். ஆனால், அதற்கு இன்னும் காலமாகும். இந்த உலகக் கோப்பைக்கு தோனி இடம்பெற்றே ஆக வேண்டும் என்கிறார் சேவாக்.

தட்டிக் கொடுக்கக் கூடியவர்

தட்டிக் கொடுக்கக் கூடியவர்

இரண்டாவது ஒருதினப் போட்டியின்போது, தான் மட்டும் விளையாடாமல், புவனேஷ்வர் குமாருக்கும் சரியான அட்வைஸ் கொடுத்து விளையாட வைத்தவர் டோணி. அவருடைய அனுபவம் இந்திய அணிக்கு தேவை. டோணி இல்லாவிட்டால், துடுப்பில்லாத தோணியாகிவிடும் இந்தியா என்கிறார் அவர்.

கோஹ்லி முடிவு

கோஹ்லி முடிவு

உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் இந்தத் தொடர் நடந்து வருகிறது. தற்போதை தொடரையும் வென்றாகிவிட்டதால், அடுத்த இரண்டு போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க கேப்டன் விராட் கோஹ்லி முடிவு செய்துள்ளார்.

கோஹ்லியின் திட்டம்

கோஹ்லியின் திட்டம்

கேதார் ஜாதவ், கே.எல். ராகுல் ஆகியோருடன், இதுவரை விளையாட, மனீஷ் பாண்டே, குல்தீ்ப் யாதவை அடுத்த போட்டிகளில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கோஹ்லி கூறியுள்ளார்.

அனுபவமும் தேவை

அனுபவமும் தேவை

இளம் வீரர்களுடன், மூத்த வீரர்களின் அனுபவமும் சேரும்போது, அணிக்கு வெற்றிதான் என்பதை, கோஹ்லியும், அணி தேர்வாளர்களும் உணர்ந்திருப்பார்கள். 2019ல் ஆட்சி அமைக்க, இந்திய அணிக்கு இப்போதே வாழ்த்து கூறுவோம்.

Story first published: Monday, August 28, 2017, 13:19 [IST]
Other articles published on Aug 28, 2017
English summary
As Indian cricket team preparing for the 2019 World Cup, MS Dhoni’s presence will mnake the difference
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X