ஐசிசி சாம்பியன்ஸ் பைனல்: 50 ஓவர்களிலும் அனல் பறந்த பாகிஸ்தானின் அதிரடி ஆட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது. ஆனால் இந்திய அணியால் இந்த இமாலய இலக்கை எட்ட முடியாமல் தோல்வியைத் தழுவியது.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. ஐசிசி சாம்பியன்ஸ் போட்டியில் 2002-இல் இந்தியாவும் , இலங்கையும் சேர்ந்து கோப்பையை கைப்பற்றின. பின்னர் 2013-இல் இங்கிலாந்தை இந்தியா வென்று கோப்பையை தட்டிச் சென்றது.

India- Pakistan final match started, India won the toss

ஆனால் இன்றைய போட்டியில் இந்தியாவை அபாரமாக வீழ்த்தி முதல் முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது. இந்தியா டாஸ் வென்ற நிலையில் பேட்டிங்கை தேர்வு செய்யாமல் பவுலிங்கை கேப்டன் கோஹ்லி எடுத்ததாலேயே இந்தியா படுதோல்வி அடைந்தது. பாகிஸ்தானின் அசார் அலி- பாகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்திய அணியின் புவனேஷ்வர்குமார் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரில் பாகிஸ்தானால் ரன் ஏதும் எடுக்க முடியவில்லை. 2 வது ஓவர் முடிவில் பாகிஸ்தான் 3 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்தது.

4-வது ஓவரில் பும்ரா பந்து வீச்சில் பாகர் சமான் அவுட் ஆக வேண்டியது. ஆனால் அம்பயர் நோ பால் என அறிவித்ததால் அவர் தப்பினார். 4 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 19 ரன்கள் குவித்தது.

5-ஆவது ஓவரை புவனேஷ்குமார் வீசினார். இதில் பாகிஸ்தான் 27 ரன்களை குவித்தது. இந்த ஓவரில் இரு பவுண்டரிகள் விளாசப்பட்டது. 6வது ஓவர் முடிவில் அந்த அணி 36 ரன்களை எடுத்தது.

8-ஆவது ஓவரில் அஸ்வின் பந்துகளை வீசினார். இதில் இரு வைட் பால்கள் வீசப்பட்டன. 5-ஆவது பந்தில் அசார் அலி சிக்ஸர் அடித்தார். இந்த ஓவர் முடிவில் 48 ரன்கள் எடுக்கப்பட்டது. 9வது ஓவரை புவனேஷ்குமார் வீசினார். இந்த ஓவரில் ரன்கள் ஏதும் எடுக்க முடியவில்லை. புவனேஷின் 2- வது மெய்டன் ஓவராகும் இது. 10-வது ஓவர் முடிவில் பாகிஸ்தான் 56 ரன்களை குவித்தது.

11-ஆவது ஓவரில் பும்ரா பந்துகளை வீசினார். இந்த ஓவரில் இருந்து பவர் பிளே 2 ஆரம்பித்தது. இந்த ஓவரில் ஃபக்கர் பவுன்டரி அடித்தார். 11 ஓவர்களின் முடிவில் பாகிஸ்தான் 63 ரன்களை பெற்றது.

12-ஆவது ஓவரில் அஸ்வின் பந்துகளை வீசினார். கடைசி பந்தில் ஃபக்கர் பவுண்டரி அடித்தார். 12-ஆவது ஓவரின் முடிவில் பாகிஸ்தான் 69 ரன்களை எடுத்தது. 13-ஆவது ஓவரில் பும்ரா பந்துகளை வீசினார். இந்த ஒவரின் 2-ஆவது பந்து வைட் பாலானது. 13-ஆவது ஓவரின் முடிவில் பாகிஸ்தான் 74 ரன்களை எடுத்தது.

14-ஆவது ஓவரில் அஸ்வின் பந்துகளை வீசினார். 14-ஆவது ஓவரின் முடிவில் பாகிஸ்தான் 78 ரன்களை குவித்தது. 15-ஆவது ஓவரில் பான்ட்யா பந்துகளை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்து லெக் பைட்ஸ் ஆனது. அசார் அலி பவுண்டரி அடித்தார். 15-ஆவது ஓவரின் முடிவில் விக்கெட் இழப்பேதும் இல்லாமல் பாகிஸ்தான் 86 ரன்களை எடுத்தது.

16-ஆவது ஓவரில் ஜடேஜா பந்துகளை வீசினார். 16-ஆவது ஓவரின் முடிவில் விக்கெட் இழப்பு ஏதும் இல்லாமல் பாகிஸ்தான் 90 ரன்களை எடுத்தது. 17-ஆவது ஓவரில் பான்ட்யா பந்துகளை வீசினார். முதல் மூன்று பந்துகளும் டாட் பால் ஆகிவிட்டது. 17-ஆவது ஓவரின் முடிவில் விக்கெட் இழப்பில்லாமல் பாகிஸ்தான் 93 ரன்களை குவித்தது.

18-ஆவது ஓவரில் ஜடேஜா பந்துகளை வீசினார் பாகர் பவுண்டரி அடித்தார். 18-ஆவது ஓவரின் முடிவில் பாகிஸ்தான் 100 ரன்களை எட்டியது. 20-ஆவது ஓவரில் ஜடேஜா பந்துகளை வீசினார். இந்த ஓவரில் 3-ஆவது பந்தில் பகார் 2 பவுண்டரிகளை வீசினார். 20-ஆவது ஓவரின் முடிவில் பாகிஸ்தான் 114 ரன்களை குவித்தது. இந்த ஓவரில் அசார் அலி 61 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். பகார் சமானும் 60 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

21-ஆவது ஓவரில் பான்ட்யா பந்துகளை வீசினார். 21-ஆவது ஓவரின் முடிவில் பாகிஸ்தான் 118 ரன்களை எடுத்தது. அசார், பகார் இருவரும் அரை சதம் கடந்தனர். 23-ஆவது ஓவரில் அஸ்வின் பந்துகளை வீசினார். பாகிஸ்தானின் பகாரும், அசாரும் நிலைத்து நின்று ஆடி வந்தனர். கடைசி பந்தில் அசார் ரன் அவுட் ஆனால். 23-ஆவது ஓவரின் முடிவில் பாகிஸ்தான் ஒரு விக்கெட் இழப்புக்கு 128 ரன்களை எடுத்ததது. அசார் அலி அவுட் ஆனதைத் தொடர்ந்து பாபர் களமிறங்கினார். 24 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான்.

25-ஆவது ஓவரில் அஸ்வின் பந்துகளை வீசினார். 25-ஆவது ஓவரின் முடிவில் பாகிஸ்தான் 134 ரன்களை குவித்துள்ளது. 26-ஆவது ஓவரில் ஜடேஜா பந்துகளை வீசினார். இந்த ஓவரில் முதல் பந்தில் பகார் சிக்ஸரும், இரு பவுண்டரிகளையும் அடித்தார். 26-ஆவது ஓவரின் முடிவில் பாகிஸ்தான் 150 ரன்களை குவித்தது. இந்த ஓவரில் 16 ரன்களை கொடுத்தார் ஜடேஜா.

27-ஆவது ஓவரில் அஸ்வின் பந்துகளை வீசினார். 2-ஆவது பந்தில் பகார் சிக்ஸரும் பவுண்டரியும் அடித்தார். இரு வைட் பால்கள் வீசப்பட்டது. 27-ஆவது ஓவரின் முடிவில் பாகிஸ்தான் 1 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை குவித்தது.

28-ஆவது ஓவரில் பான்ட்யா பந்துகளை வீசினார். 2-ஆவது பந்தில் பகார் ஒரு பவுண்டரி அடித்தார். 28-ஆவது ஓவரின் முடிவில் பாகிஸ்தான் ஒரு விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்தது.

29-ஆவது ஓவரில் அஸ்வின் பந்துகளை வீசினார். 29-ஆவது ஓவரின் முடிவில் பாகிஸ்தான் ஒரு விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை குவித்தது. 95 ரன்களுடன் சதத்தை நெருங்கினார் பகார் சமான். 30-ஆவது ஓவரில் பான்ட்யா பந்துகளை வீசினார். இந்த ஓவரின் முடிவில் பாகிஸ்தான் ஒரு விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை குவித்தது.

31-ஆவது ஓவரில் அஸ்வின் பந்துகளை வீசினார். இந்த ஓவரின் முடிவில் பாகிஸ்தான் 1 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை எடுத்தது. 92 பந்துகளில் சதம் அடித்தார் பகார் சமான்.

33-ஆவது ஓவரில் அஸ்வின் பந்துகளை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பகார் ஒரு சிக்ஸர் அடித்தார். இந்த ஓவரின் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் 200 ரன்களை எடுத்தது. இந்த ஓவரில் பாகிஸ்தான் இரட்டை சதத்தை எட்டியது. அடுத்த ஓவரில் 114 ரன்கள் எடுத்திருந்த பகார் சமான் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பாகிஸ்தான் அணி 33.1 வது ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது.

34-ஆவது ஓவரில் பாண்ட்யா பந்துகளை வீசினார். இந்த ஓவரில் பகார் அடித்த முதல் பந்தை ஜடேஜா கேட்ச் பிடித்தார். 106 பந்துகளில் 114 ரன்களை குவித்தார் பகார். அடுத்தது ஷோயப் மாலிக் களத்தில் உள்ளார். இந்த ஓவரின் முடிவில் இரு விக்கெட்கள் இழப்புக்கு பாகிஸ்தான் 202 ரன்களை எடுத்தது.

35-ஆவது ஓவரில் பும்ரா பந்துகளை வீசினார். பாபர் ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஓவரின் முடிவில் இரு விக்கெட்கள் இழப்புக்கு பாகிஸ்தான் 209 ரன்களை எடுத்தது. 36-ஆவது ஓவரில் பான்ட்யா பந்துகளை வீசினார். இந்த ஓவரின் 4-ஆவது பந்தில் பாபர் பவுண்டரி அடித்தார். 36-வது ஓவரின் முடிவில் இரு விக்கெட்கள் இழப்புக்கு பாகிஸ்தான் 216 ரன்கள் என வலுவான நிலையை எட்டியது.

37-ஆவது ஓவரில் பான்ட்யா பந்துகளை வீசினார். ஷோயப் மாலிக் 4-ஆவது பந்தில் சிக்ஸர் அடித்தார். இந்த ஓவரின் முடிவில் இரு விக்கெட்கள் இழப்புக்கு பாகிஸ்தான் 227 ரன்களை குவித்தது. 38-ஆவது ஓவரில் பான்ட்யா பந்துகளை வீசினார். பாபர் இரு பவுண்டரிகள் அடித்தார். ஒரு வைட் பந்து வீசப்பட்டது. இந்த ஓவரின் முடிவில் இரு விக்கெட்கள் இழப்புக்கு பாகிஸ்தான் 239 ரன்களுடன் இருந்தது.

39-ஆவது ஓவரில் கேதார் ஜாதவ் பந்துகளை வீசினார். 39 ஓவர்கள் கடந்த நிலையில் ஜாதவ் களமிறக்கப்பட்டார். இந்த ஓவரின் முடிவில் இரு விக்கெட்கள் இழப்புக்கு பாகிஸ்தான் 246 ரன்களை எடுத்தது. 40-ஆவது ஓவரில் புவனேஷ்குமார் பந்துகளை வீசினார்.ஷோயப் மாலிக் வீசிய பந்தை ஜாதவ் பிடித்ததால் அவுட் ஆனார். முகமது ஹபீஸ் களமிறக்கப்பட்டார். இந்த ஓவரின் முடிவில் 3 விக்கெட்கள் இழப்புக்கு பாகிஸ்தான் 247 ரன்களை பெற்றது.

41-ஆவது ஓவரில் ஜடோஜா பந்துகளை வீசினார். ஹபீஸ் இரு பவுண்டரிகள் அடித்தார். 42-ஆவது ஓவரில் புவனேஷ்வர் குமார் பந்துகளை வீசினார். இந்த ஓவரில் ஹபீஸ் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரின் முடிவில் 3 விக்கெட்கள் இழப்புக்கு பாகிஸ்தான் 266 ரன்களை எடுத்தது. பாபர் 46 ரன்களுடன் அரை சதத்தை நெருங்க இருந்தார். ஆனால் 42.3-வது ஓவரில் ஜாதவ் பந்தை தூக்கி அடிக்க கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது பாகிஸ்தான் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்தது. இமாத் வாசிம் களமிறங்கினார்.

43-ஆவது ஓவரில் ஜாதவ் பந்துகளை வீசினார். இந்த ஓவரில் 46 ரன்களுடன் பாபர் அரை சதம் அடிக்க இருந்த நிலையில் யுவராஜ் சிங் கேட்ச் பிடித்ததால் அவுட் ஆனார். இமாத் வாசிம் களமிறங்கினார். 44-ஆவது ஓவரில் பும்ரா பந்துகளை வீசினார். 2-ஆவது பந்தில் ஹபீஸ் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரின் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு பாகிஸ்தான் 278 ரன்களை எட்டியது.

45-ஆவது ஓவரில் ஜாதவ் பந்துகளை வீசினார். ஹபீஸ் இரு சிக்ஸர்களை அடித்தார். இந்த ஓவரின் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு பாகிஸ்தான் 294 ரன்களை தொட்டது. 46-ஆவது ஓவரில் புவனேஷ்வர் பந்துகளை வீசினார். ஹபீஸ் சிக்ஸர் அடித்தார். இந்த ஓவரின் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு பாகிஸ்தான் முச்சதத்தை தொட்டு 305 ரன்களை எட்டியது.

47-ஆவது ஓவரில் பும்ரா பந்துகளை வீசினார். இமாத் வாசிம் பவுண்டரி அடித்தார். அப்போது 4 விக்கெட்கள் இழப்புக்கு பாகிஸ்தான் 313 ரன்களை எட்டியது. 48-ஆவது ஓவரில் புவனேஷ்வர் பந்துகளை வீசினார். ஹபீஸ் சிக்ஸர் அடித்தார். 4 விக்கெட்கள் இழப்புக்கு பாகிஸ்தான் 305 ரன்களை பெற்றது.

48-வது ஓவரின் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 318 ரன்கள் குவித்தது பாகிஸ்தான். 49-ஆவது ஓவரில் 4 விக்கெட்கள் இழப்புக்கு பாகிஸ்தான் 329 ரன்களையும் 50 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் 4 விக்கெட்கள் இழப்புக்கு பாகிஸ்தான் 338 ரன்களை குவித்து இந்தியாவுக்கு 339 எடுத்தால்தான் வெற்றி என்ற இலக்கு நிர்ணயித்தது.

ஆனால் பின்னர் ஆடிய இந்திய அணி 10 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை சந்தித்தது. பாகிஸ்தான் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The final match between India and Pakistan started. India won the toss
Please Wait while comments are loading...