இலங்கை காலே டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அதிரடியாக 600 ரன்கள் குவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 600 ரன்களைக் குவித்துள்ளது. இதன்மூலம் வலுவான நிலையை இந்திய அணி எட்டியுள்ளது.

இந்திய அணி இலங்கையில் 6 வார கால சுற்றுப்பயணம் மேற்கொண்டு, போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

 India scored 503 runs against sri lanka in Galle test

களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு, அதிரடியாக 399 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 133 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 600 ரன்கள் எடுத்துள்ளது.

ஷிகர் தவான் 190 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். புஜாரா அதிரடியாக விளையாடி 153 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அறிமுக வீரர் பாண்டியா 50 ரன்கள் எடுத்துள்ளார்.

India Vs Sri Lanka, Lack of opening batsman-Oneindia Tamil

அஸ்வினுக்கு இது 50-வது டெஸ்ட் போட்டி. அதனால் உற்சாகமாக களமிறங்கிய அஸ்வின் வேகமாக ரன்கள் குவித்தார். ஆனால், 47 ரன்களில் பிரதீப் பந்துவீச்சில் வெளியேறினார். ஓரளவு நல்ல தொடக்கம் கண்ட சாஹா, ஹராத் பந்துவீச்சில் 16 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India scored 503 runs against Sri Lanka in Galle test first innings.
Please Wait while comments are loading...