விழி பிதுங்கி நிற்கும் இலங்கை.. வெள்ளை அடித்து வெளுக்குமா இந்தியா?

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

பல்லேகலே: முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளைப் போலவே, மூன்றாவதிலும் வெற்றி பெறும் முனைப்புடன், இலங்கைக்கு எதிராக, பல்லேகலேயில் நாளை களமிறங்குகிறது, விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி.

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. காலேயில் நடந்த முதல் டெஸ்ட்டில், 304 ரன்கள் வித்தியாசத்திலும், கொழும்புவில் நடந்த போட்டியில், இன்னிங்க்ஸ் மற்றும், 53 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இதன் மூலம், தொடர்ந்து, 9 டெஸ்ட் தொடர்களில் வெற்றி, இலங்கைக்கு எதிராக இரண்டு முறை டெஸ்ட் தொடர் வெற்றி பெற்ற கேப்டன், என, சாதனைப் பட்டியல்கள் நீண்டு கொண்டே செல்கிறது.

டோணி டூ கோஹ்லி

டோணி டூ கோஹ்லி

கடந்த, 2015ல் மகேந்திர சிங் டோணியிடம் இருந்து, கேப்டன் பொறுப்பை ஏற்றார் கோஹ்லி. அப்போது, டெஸ்ட் போட்டி தரவரிசையில், இந்தியா, 7வது இடத்தில் இருந்தது.

இளம் டெஸ்ட் அணி

இளம் டெஸ்ட் அணி

இளம் வீரர்களைக் கொண்ட, கோஹ்லி தலைமையிலான அணி, அதன் பிறகு இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் என அத்தனை அணிகளுடனும் இந்த இரண்டு ஆண்டுகளில் விளையாடியுள்ளது. தான் விளையாடிய, 27 டெஸ்ட்களில், 19ல் வெற்றியும், இரண்டில் மட்டுமே தோல்வியைக் கண்டுள்ளது.

இத்தனை சாதனைகளுடன்

இத்தனை சாதனைகளுடன்

இத்தனை சாதனைகளுடன், மிகவும் வலுவான இந்திய அணியை எதிர்கொள்ள முடியாமல், தொண்டையில் கிச் கிச் ஏற்பட்ட மாதிரி, இலங்கை அணி, விழி பிதுங்கி நிற்கிறது. முக்கிய வீரர்கள் பலர் காயம் காரணமாக விளையாட முடியாமல், பெவிலியனிலும், டிவியிலும் பார்த்து, அப்பா தப்பித்தோம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நிமோனியா காய்ச்சலால் முதல் டெஸ்ட்டில் விளையாடாத கேப்ன் தினேஷ் சண்டிமால், இந்த இந்திய அணியை மூன்றாவது டெஸ்ட்டில் வென்றால், அது மிகப் பெரிய சாதனை என்று கூறியுள்ளார். வடிவேலு படத்தில் நடப்பதுபோல், நேரம் கிடைக்கும்போதெல்லாம் அடிவாங்குவது போன்றது அல்ல இலங்கை அணி.

சிங்கத்தை விட புலிகளே ஸ்டிராங்

சிங்கத்தை விட புலிகளே ஸ்டிராங்

காலில் காயமடைந்தாலும், சிங்கத்தின் கர்ஜனை நிற்காது. இதை கோஹ்லி கண்டிப்பாக உணர்ந்திருப்பார். பழைய புள்ளி விபரங்களின் அடிப்படையில் பார்க்காமல், தற்போது இரு அணிகளும் உள்ள பார்மை பார்க்கும்போது, சிங்கத்தைவிட, புலிகளே, இந்தப் போட்டியில் ராஜாவாக இருக்கும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India is aiming for a whitewash in the test series against Sri Lanka.
Please Wait while comments are loading...