For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தாத்தாவுக்கு உடம்பு சரியில்லே.. வயித்துல வலி தாங்க முடியலே.. பிச்சிக்கிட்டு ஓடும் இலங்கை!

By Staff

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியை, டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கிலும், ஒருதினப் போட்டித் தொடரை 5-0 என்ற கணக்கிலும் வென்ற இந்திய அணி, நாளை நடக்க இருக்கும் ஒரே ஒரு டி-20 போட்டியில் விளையாட உள்ளது.

டெஸ்ட் போட்டியை, ஒரு தினப் போட்டி போலவும், ஒரு தினப் போட்டியை டி-20 போலவும் விளையாட இந்திய அணி, நாளை நடக்கும் போட்டியில் தெறிக்க விட தயாராக உள்ளது.

இந்தப் போட்டி, இரவு 7 மணிக்குதான் ஆரம்பிக்கிறது. அதனால், நாளைக்கு லீவு போட வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில், எப்படா இந்தியா தொடர் முடியும் என்று, இலங்கை வீரர்கள் காத்திருக்கின்றனர்.

தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை

தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை

தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை, தூரத்து மாமா பொண்ணுக்கு கல்யாணம் என்று லீவு கூட போட முடியாததால், வயிற்று வலி என்று சொல்லலாமா என்று யோசித்து வருகின்றனர்.

நடந்ததுதான் எல்லோருக்குமே தெரியுமே

நடந்ததுதான் எல்லோருக்குமே தெரியுமே

இந்த டி-20 போட்டிக்கான அணியை, ஆகஸ்ட் 15ம் தேதியே இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துவிட்டது. அதன்பிறகு நடந்ததுதான் எல்லோருக்குமே தெரியுமே. தற்போது, புதிய அணியை அறிவித்துள்ளது. 15 பேர் கொண்ட முந்தைய அணியில், 7 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.

8 பேர் மட்டும் லீவு சொல்லலை

8 பேர் மட்டும் லீவு சொல்லலை

கேப்டன் உபுல் தரங்கா, மிலிந்தா சிரிவர்தனா, திசாரா பெரீரா, ஏஞ்சலோ மேத்யூஸ், லசித் மலிங்கா, நிரோஷன் டிக்வெல்லா, வானிந்து ஹசாரங்கா, அகில தனஞ்செயா ஆகிய, 8 பேர் மட்டுமே இதுவரை லீவு சொல்லாதவர்கள். புதிதாக, ஏழு பேர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டி 20 தப்பிச்சிருமோ

டி 20 தப்பிச்சிருமோ

இந்தாண்டில், டி-20 போட்டிகளில் இலங்கை அணிக்கு வெற்றிகரமாகவே அமைந்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான, தலா 3 போட்டிகள் கொண்ட தொடர்களை இலங்கை வென்றது. வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு போட்டித் தொடரை 1-1 என டிரா செய்தது. தற்போது இந்தியாவுடன் விளையாட உள்ளது.

Story first published: Tuesday, September 5, 2017, 18:08 [IST]
Other articles published on Sep 5, 2017
English summary
India to face Srilanka in the only T20 match to be played tomorrow
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X