பெங்களூர் தோல்விக்கு ஆஸி. பதிலடி.. ராஞ்சி டெஸ்டில் ரன் குவிப்பு.. ஸ்மித், மேக்ஸ்வெல் அபாரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் கேப்டன் ஸ்மித் சதம் உதவியோடு 4 விக்கெட்டுக்கு 299 ரன்கள் குவித்துள்ளது ஆஸ்திரேலியா.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்திலும், பெங்களூருவில் நடந்த 2 வது டெஸ்டில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

India Vs Australia: Steve Smith-Glenn Maxwell partnership steals the show on Day 1

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஸ்மித் சதம் அடித்து கைகொடுத்தார். தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல், அதிரடியாக ரன்கள் சேர்க்க, முதல் நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்தது. 3வது டெஸ்டில்தான் அணிக்கு திரும்பிய மேக்ஸ்வெல் அபாரமாக ஆடி 82 ரன்களுடனும், ஸ்டீவன் ஸ்மித் 117 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

உணவு இடைவேளையின் பின் இந்திய பவுலர்கள் ஆஸ்திரேலிய வீரர்களை அவுட்டாக்க முடியவில்லை. தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் கேப்டன் கோஹ்லி மாலை நேர செஷனில் ஆட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Australia captain Steve Smith won the second toss of the series and elected to bat first against India in the third Test match here on Thursday (March 16).
Please Wait while comments are loading...