பாகிஸ்தானை சமாளிப்பது எப்படி என்று எங்களுக்குத் தெரியும்... விராட் கோஹ்லி விறுவிறு

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எப்படி சமாளித்து வெல்வது என்பது எங்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ளார் கேப்டன் விராட் கோஹ்லி.

மினி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி திகழ்கிறது. கடந்த 1ம் தேதி தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் இன்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தப் போட்டிகளில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் இதில் பங்கேற்றன.

ஏ பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளும் பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளும் இடம்பெற்றன.

லீக் ஆட்டங்களின் முடிவில் ஏ பிரிவில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளும் பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

முதலாவது அரை இறுதிப் போட்டி கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்தது. 2-வது அரை இறுதியில் வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. இதையடுத்து இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இன்று இறுதிப்போட்டி

இன்று இறுதிப்போட்டி

லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று இந்தியா, பாகிஸ்தான் இடையே சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. போட்டியில் பாகிஸ்தானை வெல்ல இந்தியா தயார் நிலையில் உள்ளது.

எப்போதும் போலவே நாங்க தயார்

எப்போதும் போலவே நாங்க தயார்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், "எங்களை பொறுத்தவரை இறுதிப் போட்டியை மற்றொரு சாதாரண ஆட்டமாக நினைத்து விளையாடுவோம். எப்போதும் போலவே இந்த ஆட்டத்திற்கும் தயாராகி உள்ளோம்.

நெருக்கடியை சமாளிக்க தெரியும்

நெருக்கடியை சமாளிக்க தெரியும்

பாகிஸ்தானுடன் விளையாடும்போது நெருக்கடி வந்தால் அதை எப்படி சமாளிப்பது என்பது தெரியும். அதற்குரிய அனுபவம் எங்களிடம் இருக்கிறது. நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால், மைதானத்திற்குள் நுழையும் போது இந்த விஷயங்களை பற்றி எல்லாம் சிந்திக்க முடியாது.

முந்தைய வெற்றி இன்று கைகொடுக்குமா

முந்தைய வெற்றி இன்று கைகொடுக்குமா

முதலாவது லீக்கில் நாங்கள் பாகிஸ்தானை வீழ்த்தினோம். அந்த ஆட்டத்தின் தாக்கம் இங்கு எதிரொலிக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் தொடரை குறிப்பிட்ட அணி எப்படி தொடங்கும் என்பதை யாராலும் சொல்ல முடியாது.

நம்பிக்கையோடு தொடங்கும் அணி சோடை போகிறது

நம்பிக்கையோடு தொடங்கும் அணி சோடை போகிறது

சில அணிகள் நம்பிக்கையுடன் சிறப்பாக தொடங்கும். கடைசியில் சோடை போய் விடும். சில அணிகளின் தொடக்கம் தடுமாற்றமாக இருக்கும். அதன் பிறகு அதிசயத்தக்க வகையில் மீண்டு வந்து விடும். அதற்கு பாகிஸ்தான் அணியே உதாரணம்.

முந்தைய சாதனைகள் பொருட்டே இல்லை

முந்தைய சாதனைகள் பொருட்டே இல்லை

அதனால் முந்தைய வெற்றிகள், சாதனைகள் ஒரு பொருட்டே இல்லை. தங்களுக்குரிய நாளாக அமைந்தால் உலகின் எந்த அணியையும் பாகிஸ்தானால் தோற்கடிக்க முடியும். அத்தகைய திறமை அவர்களிடத்தில் இருக்கிறது என்பதை அறிவோம்.

நம் மீது நம்பிக்கை வைப்போம்

நம் மீது நம்பிக்கை வைப்போம்

இது போன்ற பெரிய போட்டிகளுக்கு தயாராவதற்கு முதலில் நம் திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும். கவனச்சிதறலை தவிர்க்க, சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை பார்ப்பதை தவிர்க்கிறேன்.

120 சதவீத திறமையை வெளிப்படுத்துவோம்

120 சதவீத திறமையை வெளிப்படுத்துவோம்

இறுதிப்போட்டி, சவால்மிக்கதாக இருக்கப் போகிறது. இரு அணிகளும் கோப்பையை வெல்ல விரும்பும். எனவே அனைத்து வீரர்களும் தங்களது 120 சதவீத திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்." என்றார் கோஹ்லி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India vs Pakistan Final: We know how to deal with Pakistan says Virat Kohli to the press.
Please Wait while comments are loading...