அடுத்த டெஸ்டில் எனக்கு தலைவலி காத்திருக்கிறது.. சலித்துக்கொள்ளும் கோஹ்லி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை வென்றது ரொம்பவே ஷ்பெஷலானது என்கிறார் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி. அதற்கான காரணத்தையும் அவரே தெரிவித்துள்ளார்.

காலே நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றியை பெற்றது. பேட்டிங்கின் சொர்க்கபுரியாக காணப்பட்ட அந்த பிட்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் விளாசி தள்ளினாலும், இலங்கையால் இரு இன்னிங்சுகளிலும் 300 ரன்களை தாண்ட முடியவில்லை.

போட்டி முடிந்த பிறகு விராட் கோஹ்லி நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் பேசினார். அப்போது இந்த போட்டி மிகவும் சிறப்பானது என்று தெரிவித்தார் கோஹ்லி.

பவுலர்கள் சிறப்பு

பவுலர்கள் சிறப்பு

அவர் கூறுகையில், இந்த பிட்ச் பேட்டிங்கிற்கு சிறப்பானது. அதில் விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது மிகவும் கஷ்டமான விஷயம். ஆனால் இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு 304 ரன்கள் வித்தியாசத்தில் அணி வெற்றி பெற உதவினர். இதனால் இப்போட்டி மிகவும் ஸ்பெஷலானது என்று நான் நினைக்கிறேன் என்றார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

2வது இன்னிங்சில் 103 ரன்கள் விளாசி நாட்அவுட்டாக இருந்த கோஹ்லி அதுகுறித்து கூறுகையில், மீண்டும் ஒரு சதம் விளாசியிருப்பதில் எனக்கு மகிழ்ச்சியாகும். அதிலும் டெஸ்ட் போட்டியில் சதம் அடிப்பது ஸ்பெஷல்தான் என்றார்.

சிறப்பாக ஆடினார்

சிறப்பாக ஆடினார்

2வது இன்னிங்சில் 81 ரன்கள் விளாசிய அறிமுக வீரர் அபினவ் முகுந்த் ஆட்டம் பற்றி கோஹ்லி கூறுகையில், அபினவ் சிறப்பாக பேட் செய்தார். அவர் சதம் விளாச தகுதியான ஆட்டத்தைதான் ஆடினார்.

தலைவலி

தலைவலி

ராகுல் வைரல் காய்ச்சலால் முதல் டெஸ்டில் ஆடவில்லை. 2வது டெஸ்ட் போட்டிக்குள் அவர் தேறி விட்டால், அபினவ் முகுந்த்துக்கு 11 பேர் அணியில் இடம் கிடைப்பது கேள்விக்குறியாகும். இதுகுறித்து கோஹ்லி கூறுகையில், 11 பேர் அணியை தேர்ந்தெடுப்பது எனக்கு தலைவலியை தரப்போகிறது என்பது மட்டும் புரிகிறது என்றார் புன்முறுவலோடு.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian captain Virat Kohli described the team's convincing victory over Sri Lanka in the 1st Test here today (July 29) as "more special".
Please Wait while comments are loading...