இலங்கைக்கு எதிரான ஒரு நாள், டி-20 போட்டி.. இந்திய அணி அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலங்கைக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி இன்று தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் முடிந்த உடன் இலங்கை அணிக்கு எதிராக 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி-20 ஆட்டத்தில் இந்திய அணி விளையாட உள்ளது.

India vs Sri Lanka, India’s team announced

இன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில், யுவராஜ் சிங் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தோனி, தவன், கே.எல். ராகுல், ரஹானே, ரோகித் சர்மா, கேதார் ஜாதவ், மணீஷ் பாண்டே, அஸ்கர், ஹர்திக், குல்திப் யாதவ், சாஹல் ஆகியோருக்கு அணியில் விளையாட இடம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் சுரேஷ் ரெய்னாவிற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Indian team was announced against Sri Lanka in ODIs and T20.
Please Wait while comments are loading...