டோணி படைத்த மிக மோசமான சாதனை.. 16 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் சோகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மிகமோசமான ஒரு ரெக்கார்டை தொட்டுள்ளார் அதிரடி வீரர் என பெயரெடுத்த டோணி.

அது இந்தியா-மேற்கிந்திய தீவுகள் நடுவேயான 4வது ஒருநாள் போட்டியின் 46வது ஓவர். கெஸ்ரிக் வில்லியம்ஸ் வீசிய முதல் பந்தை சிங்கிளுக்கு தட்டியதன் மூலம் டோணி அரை சதம் விளாசினார்.

டோணி அரை சதம் கடக்க அவர் சந்தித்த பந்துகள் 108. டோணியின் கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுதான் மிகவும் வேகம் குறைந்த ஒரு அரை சதமாகும். 189 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டுவதில் இந்திய அணி கோட்டைவிடுவதற்கு இந்த நத்தை வேக அரை சதம் ஒரு முக்கி காரணம்.

16 வருடங்களில் முதல் முறை

16 வருடங்களில் முதல் முறை

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கடந்த 16 வருடங்களில் அடிக்கப்பட்ட வேகம் குறைந்த அரை சதம் இதுவாகும். விராட் கோஹ்லி வர்ணித்ததை போல அந்த பிட்ச்சில் பந்துகள் அதி வேகமாக வந்தன.

வேகம் அதிகம்

வேகம் அதிகம்

பந்தின் வேகம் வழக்கத்தைவிட கணிக்க முடியாத வேகத்தில் இருந்ததால் டோணியால் சரியான நேரத்தில் ஷாட்டுகளை அடிக்க முடியவில்லை. அவ்வாறு செய்ய முடியாததால், ஃபீல்டர்கள் இல்லாத இடைவெளியை பார்த்து அடித்து ரன் சேகரிக்கவும் முடியவில்லை.

மற்றவர்கள் படு மோசம்

மற்றவர்கள் படு மோசம்

இதில் டோணி தாக்குப்பிடித்ததே பெரிய விஷயம்தான். ஏனெனில் மற்ற பேட்ஸ்மேன்கள் மேற்கிந்திய தீவுகள் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விரைவிலேயே அவுட்டாகிவிட்டனர். டோணி பிட்சின் தன்மையை நன்கு கணித்து சமாளித்து ஆடிவிட்டார்.

14 ரன்கள் தேவை

14 ரன்கள் தேவை

கடைசி 7 பந்துகளில் 14 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை இருந்தபோது டோணியும், குல்தீப் யாதவும் களத்தில் நின்றனர். குல்திப் இந்தியாவுக்காக பேட் செய்த முதல் போட்டி அது என்பதால், அந்த பந்தை சிங்கிள் தட்டிவிட்டு கடைசி ஓவரை டோணி சந்தித்திருக்கலாம். ஆனால், கடைசி ஓவரில் 14 ரன்களை அடிக்க முடியுமோ என்னவோ என சந்தேகித்த டோணி, 49வது ஓவரின் கடைசி பந்தை தூக்கியடித்தார். ஆனால் பவுண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்தார். இதன்பிறகுதான் மே.இ.தீவுகள் வெற்றி உறுதியானது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MS Dhoni took a single off the first ball of the over to bring up his 50. It came off 108 balls, making it the slowest 50 of his career.
Please Wait while comments are loading...